திருமணக்காதல் 7

1K 42 2
                                    

(மறுநாள் காலேஜில்....)

என்ன அனிதா..எப்படி இருக்க- ஸ்ரீ
ம்ம்.. நல்லா இருக்க டி - அனிதா

புது ப்ரண்ட்ஸ்லா கிடைச்சிட்டாங்க போல - அனன்
யாருக்கு டி - அனிதா

வேற யாருக்கு உனக்குதா - ஸ்ரீ
அப்டில்லா இல்ல டி.. உங்கள விட்டா வேற யாரு இருக்க போறா - அனிதா
ஓ...ஓ.. அப்டி - ஸ்ரீ

என்ன டி ஒரு மாதிரி பேசறீங்க.. ஏதாச்சும் ப்ராப்லமா.. அனன் உனக்கு உடம்பு எப்படி இருக்கு - அனிதா

என்ற கேள்விக்கான பதில்.. ஸ்ரீ விட்ட அறையிலேயே கிடைத்தது..

ஸ்..ஆ.. என கன்னத்தை தேய்த்தவள்.. எதுக்கு டி இப்போ அடிச்ச - அனிதா

என்ன ஆச்சு.. ஸ்ரீ எதுக்கு அவள அடிச்ச - கவிதா

மேடம்.. எனக்கு மாமா வேலை பாக்குறாங்க அதா..யாரு டி அவனுங்க எதுக்கு எங்கள பத்திலாம் அவனுங்ககிட்ட சொல்ற - ஸ்ரீ
நா யாருக்கிட்ட சொன்ன - அனிதா

நடிக்காத எங்களுக்கு எல்லாமே தெரியும்.. உனக்கு மட்டும்தா எனக்கு உடம்பு சரி இல்லன்னு தெரியும்.. சொல்லி வெச்சமாறி அவனும் அதையே கேக்குறான் - அனன்

இல்ல டி.. அது வந்து.. அசோக் அண்ணா அனன்யாவ லவ் பண்றதா சொன்னாங்க.. அதான் ஹெல்ப் கேட்டாங்க.. சாரி டி - அனிதா

என்னது என்ன லவ் பண்றானா.. இது என்ன புது குழப்பம் - அனன்

அப்டி சொன்னா நீ சொல்லிடுவியா.. அவங்க நல்லவங்களான்னு உனக்கு தெரியுமா.. நீ பாட்டுக்கு அட்ரஸ் வரைக்கும் குடுத்துருக்க - ஸ்ரீ

சரி விடு.. டி - கவிதா

சாரி டி ஸ்ரீ .. தெரியாம சொல்லிட்ட.. இனிமே இப்டி பண்ண மாட்ட - அனிதா

ம்ம். சரி விடு ஸ்ரீ.. பசிக்குது வா சாப்பிடலாம் - அனன்

நா.. வரல..
அட வாம்மா..
என இருவரும் கேன்டீன் சென்றனர்..

கேன்டினில்...

ஸ்ரீ.. எதுக்கு டி அவள அடிச்ச - அனன்
உனக்கு தெரியாதா - ஸ்ரீ

எனக்கு தெரியும் .. அதனாலதான் கேக்குற.. நீ இதுக்குல்லாம் இவ்ளோ கோவ பட மாட்டியே என்ன ஆச்சி - அனன்
தெரியல டி.. கொஞ்சம் பயமா இருந்துச்சி அதான் - ஸ்ரீ

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Onde histórias criam vida. Descubra agora