மறுநாள் காலை...
டைம் 10 ஆகுதா.. என்ன இவ்ளோ நேரம் தூங்கிட்டோம்.. என யோசித்தவாறே அவன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தான் - ப்ரித்வி
வெளியே அனைவரும் ( ப்ரியா அசோக் யாமினி AM) ஷோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்...
என்னப்பா மார்னிங்கே மீட்டிங்கா.. AM கொஞ்சம் காஃபி குடுங்கள தல வலிக்குது... என சொல்லி கொண்டே அவர்கள் அருகில் சென்று அமர்ந்தான் - ப்ரித்வி
ஆமா.. AM சார்க்கு காஃபி குடுங்க.. இப்போ அதுதான் இவனுக்கு கேடு - யாமினி
ஏன் நா என்ன பண்ண - ப்ரித்விநீ இன்னும் என்ன பண்ணனும்.. உனக்காக நாங்க எல்லாரும் எவ்ளோ கஷ்டபட்டோம்.. நீ என்னனா அத பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம குடிச்சிட்டு ச்சி - ப்ரியா
ப்ரியா கொஞ்சம் வாய மூடு.. - அசோக்
அவள எதுக்கு வாய மூட சொல்ற அசோக்.. அவ என்ன தப்பா பேசிட்டா.. இவன் பண்ணததான சொல்றா.. அந்த பொன்னு ரொம்ப பாவம்.. எவ்ளோ பேர் முன்னாடி எப்படியெல்லாம் பேசுனான்.. இனிமே அவ எப்படி நம்ப கூட பேசுவா - யாமினி
போச்சி.. எல்லாம் போச்சி.. அவ்ளோதான்.. இவனுக்கு போய் நல்லது பண்ணனும்னு நினச்சோம் பார் நம்மள சொல்லணும் - ப்ரியா
ப்ரியா கொஞ்சம் சும்மா இரு.. அவன் எதுவும் வேணும்னு செய்யல - அசோக்
நீ அவனுக்கே சப்போர்ட் பன்னு.. இதுக்கு மேல என்னால முடியாது அசோக்.. இன்னும் எவ்ளோ நாள்தான் உனக்காக நா வெய்ட் பண்ணனும்.. நம்ப மேரேஜ்க்கு எங்க வீட்ல எவ்ளோ கஷ்டப்பட்டு ஒத்துக்க வெச்ச தெரியுமா.. ஆனா நீ அவ்ளோ ஈஸியா இவனுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்றம்தான் நமக்குனு சொல்லிட்ட.. நானும் எவ்ளோதான் எங்க வீட்ட சமாளிக்கிறது... அவனுக்குத்தான் அவன் அப்பா அம்மா இருக்காங்கள.. அவங்க பாத்துப்பாங்க நீ.. என சொல்லி முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் ஒன்று விட்டான் அசோக்...
இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன.. அப்றம் நா மனுஷனா இருக்க மாட்ட.. உள்ள போ - அசோக்
ESTÁS LEYENDO
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomanceHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️