மாலை அனன் வீட்டில்...
வாம்மா ஸ்ரீ... - அனன் அம்மா
ம்ம்.. என்னம்மா அனன்யாவ பார்சல் பண்ண ரெடி பண்ணிட்டிங்க போல - ஸ்ரீம்ம்.. ஆமாம்மா.. சரி அவள கொஞ்சம் ரெடி பண்ணும்மா - அனன் அம்மா
ஆ.. சரிங்கம்மா - ஸ்ரீசிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுதாரர்கள் வந்தனர்...
வாங்க.. வாங்க - அனன் அம்மா, அப்பா
அனைவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்...சிறுது நேரம் நலம் விசாரித்தவர்கள்... பொண்ண கூப்பிடுங்க - மாப்பிள்ளை வீட்டார்
ஸ்ரீ.. அனன்யாவை அழைத்து வந்தாள்..
எல்லாருக்கும் வணக்கம் சொல்லும்மா - அனன் அம்மாவணக்கம் என்றாள்...
உன் பேர் என்னம்மா.. என்ன படிச்சிருக்க - மாப்பிள்ளை வீட்டார்....அனன்யா.. எம்.காம் முடிச்சிருக்க - அனன்
ம்ம்.. சரிம்மா..ஸ்ரீ உள்ள கூட்டிட்டு போம்மா - அனன் அம்மா
இருவரும் அறைக்குள் சென்றனர்
பொண்ணு நல்லா லட்சணமா இருக்கா.. எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா..
ம்ம்.. சொல்லுங்க.. - அனன் அப்பாநாங்க சுத்தி வலச்சி பேச விரும்பல..
பையன் எம்.டெக் படிச்சிருக்கா.. மாசம் 45000 சம்பாதிக்குறா..
அது மட்டும் இல்லாம 2 சொந்த வீடு வேற இருக்கு...நாங்க அதிகமா கேட்கல பொண்ணுக்கு ஒரு 20 சவரன் பையனுக்கு ஒரு 5 சவரன்
மொத்தம் 25 சவரன் போட்ருங்க...
பையனுக்கு ஒரு வண்டி குடுத்திடுங்க... என்ன சொல்றிங்க...அய்யோ எங்களால இவ்ளோ முடியாதுங்க.. ஒரு 15 சவரன் தா போட முடியும்.. அதுக்கு மேல கஷ்டம்தா.. - அனன் அப்பா
பொண்ண எங்களுக்கு பிடிச்சி போச்சி.. சரி 22 சவரன் போடுங்க - மாப்பிள்ளை வீட்டார்
அறைக்குள் அமர்ந்து இதை கேட்டிருந்தவள்..
25 சவரன் என்ன நகை கடையா வெக்க போறாங்க - அனன்
ஷ்.. ச்சும்மா இரு டி - ஸ்ரீ
ESTÁS LEYENDO
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomanceHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️