-12-

796 37 1
                                    

தோழியின் திருமண போட்டோக்களை வட்ஸ்அப்பில் டவுன்லோடுசெய்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஹிக்மா.

"அஸ்ஸலாமு அலைக்கும் datha!" என்ற உற்சாகமான அழைப்புடன் பரபரப்பாக வந்தார் ஹிக்மாவின் தாய்மாமா, சுலைஹாவின் தம்பி.

"வலைக்குமுஸ்ஸலாம்!
வாங்க மாமா! உம்மா பின்னாடி கிணத்தடில இருக்காங்க." சொல்லிவிட்டு பார்க்க அவர் அங்கேயில்லை. அதற்குள் சகோதரியிடம் சென்றிருந்தார்.

'என்னாச்சு இவருக்கு? காலில் சுடுதண்ணீர் கொட்டினதுபோல எதுக்கிப்படி பரபரக்கிறாரே!' தனக்குள் முனுமுனுத்துவிட்டு மீண்டும் போனில் மூழ்கினாள்.

அவர் சகோதரியிடம் என்னசொல்லிச் சென்றாரோ அவரைவிட சுலைஹா பரபரத்தார். என்ன நடக்கிறதெனப் புரியாமல் போனும் கையுமாய் பதற்றத்துடன் வலையவந்த தாயை பிடித்து நிறுத்தினாள் ஹிக்மா.

ஹிக்மா இருபத்திநான்கு வயதை தொட்டிருக்க வீட்டில் திருமணத்திற்காக வரண் தேடும் படலம் பலநாட்களுக்கு முன்பே தொடங்கிருந்தது. எனினும் சரியான வரண் எதுவும் அதுவரை அமையவில்லை.

சமீபத்தில்கூட சில இடங்களிலிருந்து வந்து ஹிக்மாவை பார்த்துவிட்டு போனார்கள். ஆனால் எதுவித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

'இதற்கிடையில் மீண்டும் அலங்கரித்துக்கொண்டு வருபவர்கள் முன்போய் நிற்கணுமா?!' தாயின் பரபரப்பிற்கான காரணம் இதுவாக இருக்குமோ என எரிச்சல்மூண்டது அவளுக்கு.

"என்னம்மா நடக்குது? மாமா என்னத்தை சொல்லிட்டு போனாரு? இன்னைக்கும் யாராவது பொண்ணுபார்க்க வரபோறாங்களா!?" என்பதுதான் அவளின் ஒரே கேள்வியாக இருந்தது.

ஆனால் தாயார் சொல்லிச்சென்ற பதில் அவளது எரிச்சல் அப்படியே ஆச்சரியமாய் மாறியது.

"கடைசியா உன்ன பொண்ணு பார்த்துட்டு போனாங்களே அவங்க எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம். நாளைக்கு எங்களை அவங்க வீட்டுக்கு வர சொல்லிருக்காங்க"

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now