51

867 46 5
                                    

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய ஹிக்மா மெதுவாக ரய்யானின் கையை விடுவித்து கொண்டு எழுந்தாள்.

வுழு செய்துவந்து இஷா தொழுகையை நிறைவேற்றினாள். தொடர்ந்து இரண்டு ரகாத் சுன்னத் தொழுதாள். பின் பேசாமல் கட்டிலில் ஏறி படுத்துவிட்டாள்.

ரய்யான் தொழுகையை முடித்துவிட்டு நீண்டநேரம் கழித்தே உறங்கினான். பல்வேறு யோசனையும், பயமும் அவனுக்கு.

'எதையும் சொல்லாமலே தூங்கிவிட்டாளே. பிரச்சினை சுமுகமாக தீர்ந்ததா இல்லையா? இன்னும் என்மீதுள்ள சினம் தணிந்ததா இல்லையா? நாளை பங்ஷன் இருக்கு. அங்கே வருவாளோ மாட்டாளோ'

தாமதித்து உறங்கினாலும் மறுநாள் சரியாக பஜ்ர் நேரத்திற்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது ரய்யானுக்கு. இருந்தும் வழமைபோல ஹிக்மா எழுப்பி விடும்வரை எழாமலே கிடந்தான்.

ஹிக்மாவுக்குள்ளும் அதுவே ஓடிக்கொண்டிருந்தது. நேற்றைப்போல இயல்பாக அவனை தட்டியெழுப்ப அவள் மனதும் தயங்கியது.

நேரம் போய்க்கொண்டே இருக்க அவள் எழுப்பி விடுவாள்போல் தெரியவில்லை. கடைசியில் அவனாகவே எழுந்து தொழுதான்.

தொழுகை முடிந்து இருவருமே உறங்கவில்லை. ஆனால் தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் இல்லை. ஹிக்மா போனைப் பார்த்து ஓதிக்கொண்டு கட்டிலில் அமந்திருக்க ரய்யான் சோபாவில் இருந்தான்.

நடந்தவை நடந்து முடிந்து விட்டன. பாதிக்கப்பட்டது இருவரும்தான். இனியும் அவற்றைப்பேசி இருக்கின்ற வாழ்வை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்கிற புரிந்துணர்வுக்கு இருவருமே வந்திருந்தனர். ஆனால் வெளிப்படையாக பேச முடியாமல் தவித்தனர் இருவரும். காரணம் இரவு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலையை இருவராலும் ஒரே எட்டில் உதறித்தள்ள முடியவில்லை.

ஓதி முடித்ததும் தேநீர் தயாரித்து வந்து கோப்பையை அவனிடம் தராமல் மேசையில் வைத்துச் சென்றாள்.

தேநீர் கோப்பை மேசையில் அவள் வைத்துவிட்டு போன இடத்திலேயே கிடந்தது. ரய்யானோ அதை குடிப்பதை மறந்து யோசனையில் மூழ்கியிருந்தான்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now