-32-

982 36 0
                                    

அதன்பிறகே ரய்யானை வீட்டில் காணவில்லை.

லுஹர் தொழுகை முடிந்து வீட்டுக்கு வந்த இஸ்மாயில் ஹிக்மாவிடம்

"ரய்யான் எங்கமா காணவேயில்ல. இன்னும் தூங்குறானா? "

"இல்ல மாமா. கொஞ்ச நேரத்துக்கு முதலே எழும்பிட்டாரு. ஆனா இப்ப வீட்ல இல்ல "

"ஆஹ். வெளில போயிருப்பான் போல" என இஸ்மாயில் அவருக்குள்ளேயே சொல்லிக்கொண்டு நகர்ந்தார்.

ஹிக்மா தன் குடும்பத்தினருக்காக வாங்கிய புத்தாடைகளை எடுத்துச்செல்ல மாலையில் ஹிஜாஸ் வந்தான்.

"ஹிக்மா தொழுதிட்டிருக்கா. வாங்க ஹிஜாஸ் உட்காருங்க. நோன்பெல்லாம் எப்படி போகுது?" அவனை வரவேற்று அமரவைத்தாள் ரிஸ்னா.

அதற்குள் இஸ்மாயிலும் வந்துவிட

"என்ன மகன்! வீட்ல எல்லாரும் சுகமா?

"அல்ஹம்துலில்லாஹ்! எல்லாரும் சுகம் மாமா. நோன்பு அவசரமா முடியப்போகுதே. இவ்வளவு நாள் போனதே தெரியல்ல "

"அதென்னமோ உண்மைதான். நேத்துத்தான் தலை நோன்பு பிடிச்ச மாதிரி இருக்கு "

"ஹிம்னா என்ன செய்றா? அவளையும் கூட கூட்டிட்டு வந்திருக்கலாமே " ரிஸ்னா கேட்க

"ஏன் நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா. வீட்ல உசுர வாங்குறதே போதும். இதுல கூட வேற கூட்டிட்டு சுத்தனுமா?" தங்கையை அவன் மொழியில் புகழ்ந்தான்.

"ஹ.. ஹா.."

"எங்க? ரீஹா குட்டிட சத்தமில்ல"

"ஐயோ! அதை மட்டும் கேட்காதிங்க. அழுதழுது ஒருவழியா இப்பத்தான் தூங்கினா. ரய்யானை கண்டதிலிருந்து ஒரே அழுகை. பழக்கமில்ல தானே"

"என்ன?! ரய்யான் மச்சான் ஸ்ரீலங்கா வந்திருக்காரா?!"

"நேத்து நைட் வந்திறங்கும் வரைக்கும் எங்களுக்கே தெரியாது மகன்"

"அன்னைக்கு பேசும்போது நோன்பு முடிஞ்சு வர்றதா தான் சொன்னாரு "

"எங்கள்டயும் அப்படித்தான் சொல்லியிருந்தான். ஆனா சொல்லாமல் கொள்ளாமல் வந்துட்டான் "

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now