-43-

791 40 7
                                    

இன்றும் மாலைவகுப்பு முடிந்து வந்தபின் ஆரம்பித்த சண்டைதான் மக்ரிப்பையும் தாண்டி போய்க் கொண்டிருந்தது.

சுலைஹாவும் முடியும்போது முடியட்டும் என கண்டுகொள்ளாமல் இருந்திடவே எண்ணினார். ஆனால் ஹிஜாஸ் படிக்கின்ற நேரம் வீணாகுவது பொறுக்காமல் பஞ்சாயத்திற்கு வந்தார்.

"மக்ரிப் நேரம். எல்லார் வீட்டிலயும் ஓதல், படிப்பு சத்தந்தான் கேட்கும். எங்கட வீட்ல மட்டுந்தான் ஓயாத சண்டை"

"அவன்தான் முதல்ல என் தலைமுடிய பிடிச்சு இழுத்தான்--" ஹிக்மா அண்ணனை கைகாட்ட

"சின்னப் புள்ளைகள் மாதிரி இழுத்தது, அடிச்சது, கடிச்சதெல்லாம் போதும். ஹிம்னா! நீ உன் ரூமுக்கு போ. ஹிஜாஸ்! நீ போ உன்னோட ரூமுக்கு. இனி ஒருசத்தம் வரக்கூடாது. சொல்லிட்டன்" அன்னையின் கட்டளைக்கு பயந்து இருவரும் தத்தமது அறைக்குள் புகுந்தனர்.

இருவரையும் நினைத்து புலம்பிக்கொண்டே இரவுக்கான சமையல் தயார் செய்தார் சுலைஹா.

உண்மையிலே அடுத்த இரண்டு மணிநேரமும் வீடே மயான அமைதியில் இருந்தது.

கடையிலிருந்து திரும்பிய ஹாலித் கூட ஆச்சரியப்பட்டுப் போனார்.

'ஹிம்னா மட்டும் இருந்தாளே வீடு அமைதியாக இருக்க வாய்ப்பில்லை. நாநாவும் தங்கையும் இருந்தும் இப்படி இருக்கிறதே'

வந்ததுமே மனைவியிடம் அதீத அமைதியின் காரணத்தை வினவ சுலைஹா அதற்கு பெரிய கதையே சொன்னார். அதுவரை சொல்லிப்புலம்ப ஆளில்லாமல் தவித்தவர் கணவனிடம் பிள்ளைகளை பற்றி கோபதாபத்துடன் கொட்டித்தீர்த்தார்.

"சரி சரி. எல்லாம் நம்ம வீட்டோடு இருக்கிற வரைக்குந்தானே அப்படி இருக்கப்போகுதுகள். இருந்திட்டு போகட்டும் விடுங்க"

"நீங்களே இப்படி பொறுப்பில்லாம சொல்றீங்களே. படிக்கிற காலத்துல ஒழுங்காப் படிச்சாத்தானே நாளைக்கு அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும்"

"நீங்க சொல்றது சரிதான். இல்லைனு சொல்லலை. எங்க பிள்ளைகள் கெட்டிக்காரங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. படிச்சு நல்லா வருவாங்க. ஆனா படிச்சு முடிச்சு பெரியாளாகிட்டா இந்தமாதிரி சுதந்திரமா இருக்க மாட்டாங்க"

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now