53

1.9K 48 40
                                    

கொழும்பு சென்றுவந்து ஒரு வாரம் கழிந்திருந்தது.

அன்று அலாரம் செய்த குளறுபடியோ என்னவோ சற்று தாமதித்து விழித்ததால் ஒரு பதற்றத்துடன் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் ஹிக்மா.

"இந்த பைல்கவர், கைட்புக் ரெண்டையும் என்னோட பை போட்டு விடுங்கலேன் ப்ளீஸ். நான் கீழபோய் சாப்பாடு பேக் பண்ணிட்டு வாரன்"

கொடுத்தவைகளை ரய்யான் பையில் வைப்பதற்குள் "ஆஹ் இதையும்.. " என்று இன்னும் இரண்டு குறிப்பேடுகளையும் அவனிடம் தந்துவிட்டு சமயலறைக்கு விரைந்தாள்.

ஏற்கனவே பையிலிருந்த பொருட்களோடு ஹிக்மா கொடுத்தவற்றை சிரமப்பட்டே உள்ளே வைக்க வேண்டியிருந்தது.

சமயலறையிலிருந்து வரும்போது அவள் கையில் சாப்பாட்டுப்பெட்டி, தண்ணீர்போத்தல், கரண்டி எல்லாம் இருந்தன.

"இதையும் அதுக்குள்ளே வச்சிருங்கலேன். நான் ஷோல் சுத்தனும். வேன் வேற வந்திரும். குயிக்கா வைச்சிருங்க"

ஏற்கனவே தந்தவைகளுக்கே  இடமின்றி திணித்து வைத்தவனுக்கு இதையெல்லாம் எங்கே வைப்பது என்றிருந்தது.

"இது மட்டுந்தானா? இல்ல ஏதாச்சும் சட்டிப்பானைகள் விடுபட்டிருக்கா?"

அவனது நக்கலில் திரும்பிநின்று முறைத்தாள்.

"பின்ன என்னவாம்.. பாருங்க இந்த பைக்குள்ள எத்தனை சாமானைத்தான் வைக்கிறதுன்னு ஒரு அளவு இல்லையா? ரெண்டு புக்ஸ போடவே இடமில்ல. இதுல கிட்சன்ல உள்ள சாமானெல்லாம் அள்ளிட்டுவந்து உள்ள அடுக்க சொல்றீங்க.."

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஷோலை கட்டி தயாராகி வந்தவள் அவனை நகரச் சொல்லிவிட்டு அவன் திணித்து வைத்ததை எல்லாம் வெளியில் எடுத்தாள். பின் ஒவ்வொன்றாக அடுக்கி அனைத்தையும் கச்சிதமாக உள்ளே வைத்து மூடிவிட்டு 'எப்படி' என்பது போல அவனை ஒரு பார்வை பார்க்க

"அ..அது.. அப்போ ஒரு சொட்டுக்கூட இடமிருக்கல.. இப்ப எப்படி இடம் வந்திச்சு?" என்று முனகியவாறே பையை ஆராய்ந்தான்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now