-40-

855 40 3
                                    

படபடவென பேசிமுடித்து கண்களை திறந்தபோது ஹிக்மா கண்டது ரோஸ் வண்ணத்தில் புதிய உலகத்தில் அடியெடுத்து வைத்தும் அதை கண்திறந்து பார்த்திட சோம்பல்பட்டு துயில் கொண்டிருக்கும் பிஞ்சுக் குழந்தையின் புகைப்படத்தை.

அவளறியாமலே ரய்யானிடம்ருந்த போனை தன்கையில் வாங்கிக்கொண்டாள்.
கண்மணிகள் விரிய இன்னும் நன்றாக உற்றுப்பார்த்தாள்.

அவள் பார்ப்பதை இதழ்களில் குறுநகையோடு ரசித்துக் கொண்டிருந்தான்.

"மாஷாள்ளாஹ்..! எவ்வளவு க்யூட்டா இருக்கு! யாரோட புள்ள இது? எப்ப பொறந்திச்சு" முகம் நிறைந்த புன்னகையுடன் வினவினாள்.

"பெருநாளன்று என் ப்ரெண்ட்ஸ் ரெண்டுபேர் வீட்டுக்கு வந்தாங்கல்ல. அதுல ப்ளூஷேர்ட் போட்டிருந்தவனோட பேபி இது. ஈவினிங்தான் கிடைச்சதாம்"

அவன் சொன்ன விளக்கங்கள் ஹிக்மாவின் செவிகளுக்குள் புகுந்ததாகவே தெரியவில்லை. அவள் அந்த குழந்தையின் புகைப்படத்திலே லயித்திருந்தாள்.

நெருங்கி அமர்ந்து அவனிடமே போனைக்காட்டி

"உடம்பெல்லாம் எப்படி ரோஸ் கலர்ல இருக்குல ரோசாப்பூ மாதிரியே" சிலாகித்தாள்.

"ம்ம்ம்..." என்றான்.

"இதைப் பாருங்களே! பொறக்கும்போதே தலைல எவ்வளவு முடி இந்த பேபிக்கு" திரையை பெருப்பித்துக் காட்டினாள்.

"ம்ம்ம்..."

"புருவம் பென்சில்ல கீறி வெச்சதுமாதிரியே இருக்குல?"

"ம்ம்ம்..."

"எந்த டென்ஷனுமில்லாமா சுருண்டு படுக்குறதுகூட எவ்வளவு க்யூட்டா இருக்குதுல?"

"ம்ம்ம்..."

"என்ன நீங்க எல்லாத்துக்குமே 'ம்ம்ம்..' னு சொல்லிட்டு இருக்கிங்க?" என்று நிமிர்ந்து அவனை ஏறிட அவனோ இதழ்களில் குறுநகையுடன் பார்வையை கீழ்நோக்கி காட்டினான்.

பார்த்தவள் திடுக்கிட்டாள்.

கிட்டத்தட்ட அவன் மடியில் இருந்தாள். குழந்தையை கண்ட ஆனந்தத்திலும், ஆர்வத்திலும் தன்னிலை மறந்து அவனை நெருங்கி அவன் மார்போடு ஒட்டிக்கொண்டு இருந்தாள். அது போதாதென்று அவன் கையையும் அசைக்க முடியாதபடி இருக்கிப் பிடித்திருந்தாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Tempat cerita menjadi hidup. Temukan sekarang