-42-

804 38 5
                                    

அதன்பின்பே ரய்யானுக்கு நிம்மதியாக மூச்சுவந்தது. ஆனால் அவள் குழந்தையை கையாள்வதை ஆர்வமுடன் பார்த்திருந்தான்.

சில நிமிடங்கள்தான் கடந்திருக்கும்

"இங்க பாருங்க.. இங்க பாருங்க.." என குதூகலிக்க ஆரம்பித்த ஹிக்மாவை விசித்திரமாகப் பார்த்தான் ரய்யான்.

"ம்ப்ச்.. என்னைப் பார்க்க சொல்லல. இவளைப் பாருங்க. தூக்கத்தில சிரிச்சாள். எவ்வளவு அழகா இருந்திச்சு தெரியுமா. மிஸ் பண்ணிடிங்க" என்கையில் அவன் கண்களுக்கு ஹிக்மாவும் ஒரு குழந்தையாகத் தெரிந்தாள்.

'இப்படி ஊரார் குழந்தையை கையில் ஏந்தியதற்கே இவள் இத்தனை ஆனந்தமும், ஆர்ப்பரிப்பும் காட்டுகிறாள். நமக்கே நமக்கென்று ஒரு குழந்தை பிறந்தால் எப்படி மகிழ்வாள், கொண்டாடுவாள்'

கற்பனை பண்ணி பார்த்தவனுக்கு நிஜத்தில் நடந்தால் எவ்வளவு இன்பமாக இருக்குமென்ற ஆவலில் உள்ளம் குதூகலித்தது. ஆனால் கற்பனைக்கும் நிஜத்திற்கும் ரொம்ப தூரம். நினைப்பதோடு நிறுத்திக் கொண்டான்.

மறுபடியும்

"ஆஹ்.. இப்ப பாருங்க சிரிக்கிறா.. பாருங்க" இம்முறை அவனுமே பார்த்தான்.

அவள் சொன்னதில் பொய்யில்லை. அவ்வளவு அழகா இருந்தாள் அந்த குட்டி தேவதை. அவள் சிரிப்பதை பார்த்து அவனது இதழ்களும் கவலை மறந்து புன்னகைத்தது.

"அப்படியென்ன ரெண்டு பேரும் சிரிச்சி பார்த்திட்டு இருக்கிங்க?"
என்றபடி நாசிர் ஒரு ட்ரேயுடன் வந்தான்.

"நாநா! உங்கட மகள் தூக்கத்தில் அழகா சிரிக்கிறா"

"ஆமா.. அவ பகல்ல நல்லா சிரிச்சு சிரிச்சு தூங்குவா. நைட் ஆனால் அழுதழுது எங்க யாரையுமே தூங்க விடாம பண்ணிருவா"

"உண்மையாவா?"

"நம்பலைன்னா நைட் பன்னண்டு மணிக்குமேல இந்த ரோட்ல வந்துபாருங்க தெரியும்"

இன்னொரு ட்ரேயுடன் வந்த நாசிரின் தாயார்

"நீயும் பொறந்து மூனுமாசம் ஓயாம அழுதவன்தான். நீ அழுத அழுகை ஊருக்கே தெரியும். இப்ப என் பேத்திய குறைசொல்ல வந்துட்டான்" என நாசிரின் காலை வார இருவருமே சிரித்து விட்டார்கள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now