-22-

751 40 3
                                    

ரய்யானின் குரூர முகத்தை ஏற்கனவே ஹிக்மா கண்கூடாக கண்டிருப்பதால் அவனின் எதிர்வினை எப்படியிருக்குமோ என்ற பயத்திலே அவனிடம் வாய்திறக்க பயமாக இருந்தது.

ஆனால் எதிர்காலத்தை நினைக்கையில் அது அவனை காட்டிலும் பயமாய் இருந்தது. ஆனால் எப்படியும் பேசி விடுவதென்று அன்று பிடிவாதமாக காத்திருந்தாள்.

எனினும் இஸ்மாயில் ஹிக்மாவை முந்திக்கொண்டார்.

இருமகன்களிடமும் ஆயிஷாவின் பெயரில் மேலும் சில ஸதகாக்களை வழங்குவதற்காக கலந்துரையாடி விட்டு

"ரய்யான்! நீயும் ரியாஸோட சேர்ந்து கடையை நடத்தலாமே. இனியும் இந்த வெளிநாட்டு வேலையெல்லாம் தேவையில்லை" என்றார்.

"இல்ல வாப்பா. வேலைய விடுறதா இருந்தாலும் அதுக்கான போர்மலிடிஸ் முடிக்க நான் மறுபடி போகத்தான் வேணும் "

"சரி அதை முடிச்சிட்டு வந்து நாநாவோட சேர்ந்து பிஸினஸ பார்த்துக்கலாமே. அதுதானே உங்க உம்மாவோட ஆசையும்"

"சரி வாப்பா. இன்ஷாள்ளாஹ் அப்படியே செய்றன்"

மறுப்பின்றி உடனே ரய்யான் ஒத்துக்கொண்டதில் மகிழ்ந்து போனார் இஸ்மாயில்.

இடையில் ரியாஸுக்கு அழைப்பொன்று வர பேசுவதற்காக அவன் எழுந்து சென்றதும் இஸ்மாயில்

"ரய்யான்! உன்கிட்ட இன்னொரு விஷியமும் சொல்ல வேண்டியிருக்கு"

"என்ன வாப்பா?"

"நீயும் ஹிக்மாவும்---" என ஆரம்பிக்கும் போதே

"வாப்பா ப்ளீஸ்! இப்ப அதப்பத்தி எதுவும் பேசவேணாம்"

"முதல் பொறுமையா சொல்றதைக் கேளு மகன்"

"நான் எதையும் கேட்கத் தயாரில்லை. அதைப்பத்தி ஏற்கனவே நான் முடிவு பண்ணிட்டன்" ரய்யான் பேச்சை மறுக்கவும் இஸ்மாயில் பொறுமையிழந்தார்.

"உன்னோட முடிவு என்னன்னு நல்லாவே தெரியும். ஆனா அது எப்பவும் நடக்காது. ஹிக்மா இந்த வீட்டு மருமகள். எப்பவும் எங்கட மருமகளா அவள் இங்கதான் இருப்பா. சொல்லிட்டன்"

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now