-30-

853 38 0
                                    

ஹிக்மாவின் குரலைக் கேட்டபின் ஆவலோடு அழைப்பேசித் திரையை எதிர்நோக்கி காத்திருந்தான். அவனை அதிகநேரம் காக்க வைக்காமல் சில வினாடிகளி அவள் விம்பம் தொடுதிரையில் வந்தது.

பலூடா கலக்கிக் கொண்டிருந்தாள்.
கைகளில் பலூடா ரோஸ் சிரப் பட்டிருக்க வேண்டும்.
முன்னெற்றிக் கூந்தலை பின்னால் தள்ள சிரமப்பட்டுக் கொண்டே பெரியம்மாவிடம் பேசினால். அந்த முடிக்கற்றையை சரிசெய்திட அவன் கைகளை துடித்தன.

அவர் போனை நீட்டியும் அவள் நிமிர்ந்துகூட பார்க்காமல் பேச மறுத்ததும் அனைத்து உற்சாகமும் வடிந்து போனது.

எனினும் மறுநொடியே பெரியம்மா வீடியோ இயங்குவதை அவளிடம் போட்டுடைக்க ஹிக்மா போனையும் அவளையும் மாறிமாறிப் பார்த்துத் திகைத்துப்போக அவனும் நடப்பதை பார்த்து ஆர்வமனான்.

பெரியம்மாவிடம் முறையிடுவதைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.

பதற்றத்தில் ஷோலைப் போட்டுக்கொள்ள முடியாமல் முகத்தை சுழித்து பெரியம்மாவின் மேலுள்ள கோபத்தையும் சேர்த்து ஷோலிடம் காண்பித்தாள்.

பெரியம்மாவின் செயலிலும், பேச்சிலும் கோபம் துளிர்த்தாலும் அதைக் கட்டுப்படுத்த அவள் படும்பாட்டைப் பார்க்கையில் அவன் கண்ணுக்கு ஹிக்மா மேலும் அழகாகத் தெரிந்தாள்.

அப்படியே அவளை அள்ளிக்கொள்ள வேண்டும் போலிருந்தது ரய்யானுக்கு.

எப்படியோ ஷோலை போட்டுக்கொண்டு பெரியம்மாவிடம் போனைக்கேட்க அவரோ கொடுக்காமல் அறிவுரை நல்கி அவள் பொறுமையை மேலும் சோதித்தார். அப்போதும் கண்களை இருகமூடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். அவரிடம் வார்த்தையை விட்டு விடாமலிருக்க அவள் படும் அவஸ்தையையும் ரசித்துக் கொண்டிருந்தான்.

மறக்காமல் அவளது பாவனைகள் ஒவ்வொன்றையும் ஸ்க்ரீன் ஷொட் எடுத்து  பத்திரப்படுத்திக் கொண்டான்.

போனை பெரியம்மாவிடமிருந்து வாங்கியவள் உடனே வீடியோவை நிறுத்திவிட்டு அவர் அறிவுருத்தியது போல் மென்மையாக

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now