-36-

768 41 0
                                    

ஹிக்மா கீழேசென்று ஆகாரங்களை சூடு பண்ணிக் கொண்டிருக்கையில் ரிஸ்னாவும் வந்துசேர்ந்தாள்.

"நானும் என்னடா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுதே. இது மழைக்காலமும் இல்லையேனு குழம்பிப் போயிருந்தன். இப்பத்தானே விளங்குது சில அதிர்ச்சிகளை தாங்குற சக்தி வானிலைக்குமே இல்லைனு"  ரிஸ்னாவின் கூற்றிலுள்ள கிண்டலை உணர்த்து

"போங்க datha.. நீங்க ஹிம்னாவ விட மோசம்" பொய்யாக கோபித்தாள்.

"ஹ.. ஹ்ஹா.. ஹிம்னா அப்படியென்ன சொன்னாள்? எங்களுக்கும் சொன்னா நாங்களும் கொஞ்சம் எங்க பங்குக்கு முடிஞ்சதை செய்வம்தானே "

"ஐயோ! அள்ளாஹ்வுக்காக வேணாம்"

சகோதரிகள் தங்களது பேச்சின் நடுவிலும் ரியாஸும், இஸ்மாயிலும் வருவதற்குள் உணவை சாப்பாட்டு மேசையில் வைத்து ஒழுங்குபடுத்தி முடித்தவிட்டனர்.

அன்று ஹிக்மா எழுந்து வந்தபிறகே மற்றவர்கள் வந்தார்கள். ரய்யானைத் தவிர. வந்ததும் எல்லோரது முதல் கேள்வியும் ரய்யான் உடல்நிலை பற்றித்தான்.

"ரய்யானுக்கு இப்போ எப்படியிருக்கு?"

"நைட்டும் நல்ல காய்ச்சல். மருந்து குடுத்து தூங்க வச்சிருக்கேன்"

"மருந்துக்கும் காய்ச்சல் குறையலயா?"

"பெருசா குறைஞ்ச மாதிரி தெரியலை மாமா"

"காலைல பார்த்துட்டு இன்னொரு மருந்து எடுப்போம்"

"நானும் அதைத்தான் யோசிச்சன்"

அன்று ரய்யானை நோன்பு பிடிக்க எழுப்பவில்லை. அவனும் மருந்தின் வீரியத்தில் நன்றாகத்தூங்கினான்.

வழமைபோல எட்டுமணிக்கு கண்விழித்தாள் ஹிக்மா. அவன் நெற்றியில் கைவைத்து சோதித்தாள். இன்னும் காய்ச்சல் அடித்தது. ஆனால் முன்புபோல கடுமையில்லை. மெல்லிய சூடுதான்.

அவன் விழிப்பதற்குள் அவனுக்காக கஞ்சி காய்ச்சி எடுத்துவர சமயலறை சென்றாள்.

அவள் திரும்பி வருவதற்குள் அவனும் எழுந்து காலைக்கடன்களை முடித்து அமர்ந்திருந்தான். இன்னும் தலைவலி குறையவில்லை போலும் தலையை தாங்கிப் பிடித்திருந்தான்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now