-28-

792 35 7
                                    

ரமழான் மாதமும் நெருங்கி வர அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இஸ்லாமிய நாட்காட்டி முறை பிறைக்கணக்கின் படியே கணக்கிடப்படுகிறது. முதலாம் பிறையுடன் மாதம் ஆரம்பித்து கடைசி தேய்பிறையுடன் முடிவடையும்.

ரமழான்மாதம் ஆரம்பமாகிறதா? நாளையிலிருந்து நோன்புநோற்பதா என்பதை தீர்மானிக்க கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழுவினர் ஒன்று கூடியிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள், விஷேடமாக கரையோர மாவட்டங்களில் வாழ்பவர்கள் தலைபிறையைக் கண்டால் தெரியப்படுத்துமாறு பிறைக்குழுவினரால் வேண்டப் பட்டிருந்தார்கள்.

வானோலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த பிறைக்குழுவின் கலந்துரையாடலுக்கு செவிசாய்த்திருந்தார் இஸ்மாயில்.

ஒருவாரத்திற்கு முன்பே ஹிக்மாவும், ரிஸ்னாவும் வீடு முழுவதும் கழுவித்துடைத்து சுத்தப்படுத்தி ரமழானை வரவேற்கத் தயாராகியிருந்தனர்.

"என்ன மாமா? இன்னைக்கு பிறை காணுவாங்கலா மாட்டாங்களா?"

"தெரியாது மகளே! இதுவரைக்கும் கண்டதுக்கான எந்த செய்தியுமில்ல"

"அப்ப நாளைக்கு நோன்பா இருக்காதோ?" என்றாள் ஹிக்மா ஏக்கத்தோடு

"அது சொல்லேலாதும்மா. இன்னும் டைமிருக்கு. பார்க்கலாம்" என்றதோடு சேர்த்து

"ரய்யான் சொன்னான் இன்னைக்கு அங்க தலை நோன்பாம். எப்படியும் இங்கயும் நோன்பாகத்தான் இருக்கும்"

ரய்யானின் பெயர் உச்சரிக்கப்பட்டதும் வேலையிருப்பாக கூறி ஹிக்மா சமலறைக்கு நழுவினாள்.

சில நிமிடங்களில் இஸ்மாயிலின் குரல் வீடெங்கும் ஒலித்தது.

"மகள் பிறை கண்டாச்சி. புத்தளம், கிண்ணியா ரெண்டெடத்துல கண்டிருக்காங்க. உறுதிப்படுத்திட்டாங்க. அல்ஹம்துலில்லாஹ்! நாளைக்கு நோன்பு!"

இஸ்மாயில் ரியாஸுடன் அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்காக சென்றுவிட ஹிக்மாவும், ரிஸ்னாவும் சஹர் உணவு தயாரிப்பதில் ஈடுபட்டனர்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now