-29-

758 34 2
                                    

ஐந்துமணி நெருங்கியதும் பலூடா கரைக்க ஆயத்தமானார் ஹிக்மாவின் சித்தி.

"நீங்க இருங்க சாச்சி. நான் கரைக்கிறேன்" என்று ஹிக்மா முன்வந்தாள்.

பாத்திரத்தையும், பலூடாவுக்கு தேவையான பொருட்களையும் ஹிக்மாவிடம் ஒப்படைத்துவிட்டு இன்னுமிருந்த வேலைகளைப் பார்க்கச்சென்றார் சித்தி.

தேவைக்கேற்ப பாலுக்கு நீரை கலந்து சீனி, பலூடா சிரப் சேர்த்து கரைக்க முற்பட அவளது bubble georget shawl ஓரிடத்தில் நில்லாமல் வழுக்கிக்கொண்டு இடைஞ்சல் செய்தது.

அதைக்கலட்டி அருகிலிருந்த கதிரையில் வைத்துவிட்டு வசதியாக அமர்ந்து கலக்க ஆரம்பித்தாள்.

"ஹிக்மா.....!"

வரவேற்பரையிலிருந்தே அவள் பெயரை கூவிக்கொண்டு வந்தார் அவளது பெரியம்மா.

"பெரியம்மா நான் இங்கிருக்கேன்" என்று குரல் கொடுத்தாள்.

"இந்தா வர்றேன்" என்று ஹிக்மாவிடம் விரைந்தார்.

"என்ன பெரியம்மா? எதுக்கு கூப்டீங்க?"

கையிலிருந்த வேலையால் பின்னலிலிருந்து விடுபட்ட முந்நெற்றி முடிகளை தொடமுடியாமல் முழங்கையால் பின்னுக்கு தள்ளிக்கொண்டே வினவினாள்.

"ரய்யான் உன்னோட பேசனுமாம் இந்தாம்மா!" போனை அவள்புறம் நீட்டினார்.

இப்படி யாராவது அவளிடம் வந்து நிற்பார்களென்று ஏற்கனவே ஊகித்துத்தான் அவள் பலூடா கரைக்க முன்வந்ததே.

"இல்ல பெரியம்மா நீங்க பேசுங்க. கைல வேலையா இருக்கேன். பிறகு பேசுறேன்னு சொல்லிடுங்க" அவரை நிமிர்ந்து பார்க்காமலே சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தாள்.

"ஐயோ இதை வேறயார் கிட்டயாவது குடு. செய்யட்டும். ரய்யான் மகன் பார்த்திட்டு இருக்குறாரு நீ முதல்ல அவரோட பேசும்மா"

'பார்த்திட்டு இருக்கிறாரா?' புரியாமல் நிமிர ரய்யான் வீடியோ அழைப்பில் இருந்தான்.

போனைப் பார்த்துவிட்டு மறுகணம் தன்னை ஒருமுறை ஏறிட்டவள் திடுக்கிட்டாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now