ரய்யான் கண்ணடித்த காட்சியை கண்டத்திலிருந்தே தங்கை ஹிம்னாவின் வாயில் 'லவ்பேர்ட்ஸ்' பாட்டுத்தான்.
ஆனால் ஹிக்மா மட்டும் கேட்குபடி சொல்லித்திரிந்தாள். அதனால் ஹிக்மாவும் சிறு கண்டிப்புடன் பொறுத்துக்கொண்டாள்.
இப்போது அவளுக்கு மற்றவர்முன் அக்காவை கேலிசெய்து விளையாடினாள் எப்படியிருக்கும் என்ற ஆசை துளிர்விட்டது.
" நாநா..." ஹிஜாஸை கூப்பிட்டாள்.
ஹிஜாஸ் ரய்யானுடன் கதையில் லயித்திருக்க ஹிம்னாவின் அழைப்பு எடுபடவில்லை.
"ஹிம்னா! இப்ப எதுக்கு அவனை கூப்பிடுற சும்மாயிரு" தங்கையை அடக்கினாள் ஹிக்மா.
"எல்லாம் உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் datha"
"நீ ஒரு ஹெல்ப்பும் பண்ணத் தேவையில்லை. உன் வாய வெச்சிட்டு சும்மா இருந்தாலே போதும்" சினந்தாள் தமக்கை.
"நியாயமா பார்த்தா நீ நாநாவோடதான் கோவிக்கனும். அவன்தான் உன்னோட நிலமை தெரியாம உன் ஆள பிடிச்சுவெச்சி சம்பல் அரைச்சிட்டு இருக்கான்"
ஹிக்மா தங்கையை அதட்ட அவளோ அண்ணனை அழைப்பதிலே முனைப்பாக இருந்தாள்.
"நாநா....!"
"ஹிம்னா! என்ன பிரச்சினை உனக்கு?" வெளியிலிருந்தே குரல் கொடுத்தான் ஹிஜாஸ்.
'சாதாரணமாகக் கூப்பிட்டா இந்த நாநா வரமாட்டான். இப்ப பாரு' என்றவள் அடுத்தமுறை அலறினாள்.
"நாநா............!!"
ஏதோ பூச்சி பூராணைக் கண்டு பயந்து கூச்சலிடுவதாக நினைத்து இம்முறை பதற்றத்துடன் உள்ளே வந்தான் ஹிஜாஸ்.
அங்கே சகோதரிகள் இருவரும் உட்கார்ந்திருப்பதை கண்டதும்
"Datha பக்கதிலதானே இருக்கா. எதுக்கு இப்படி கத்தி கூப்பாடு போடுற? அப்படி என்னத்தைய கண்டு பயந்து தொலைச்ச?"
"லவ் பேர்ட்ஸ்!"
"என்ன உலர்ற? லவ்பேர்ட்ஸா?" ஹிஜாஸ் கடுப்புடன் வினவினான்.
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம் |Completed|
General Fiction"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும்...