ஆவலோடு கதவை திறந்தாள் ஹிக்மா. ஆனால் அங்கே அவள் எதிர்பார்த்த நபர் இல்லை. ஏமாற்றமாய் உணர்ந்தாலும் ஒரு பிரகாசமான புன்னகையில் அதனை சாதுர்யமாக மறைத்தாள்.
"வாங்க datha" அங்கே நின்றிருந்த ரிஸ்னாவை உள்ளே அழைத்தாள். அதற்குள் அவளின் முகமாற்றத்தை எப்படியோ ரிஸ்னா கண்டுகொண்டாள்.
"டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ?""ஐயோ அதெல்லாமில்ல datha. உள்ள வாங்க" சிரிப்பில் மேலும் பிரகாசத்தை ஏற்றினாள்.
"நாளைக்கு காலைல எட்டு மணிக்கு பார்லருக்கு போகனும். ஸோ கொஞ்சம் ஏர்லியா ரெடியா இருங்கனு ஞாபகப்படுத்திட்டு போகத்தான் வந்தன். வேற ஒன்னுமில்ல. நீங்க ரெஸ்ட் எடுங்க"
நாளைக்கு வலீமா. அவளை அலங்காரம் செய்ய வேண்டும்.
"ஆஹ் சரி datha. இன்ஷாள்ளாஹ்"
ரிஸ்னா புன்னையோடு விடைபெற்றதும் இன்னும் ஒரு அரைமணி நேரம் 'ரய்யான் வந்துவிடுவான்' என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள்.
அடுத்த அரைமணி நேரம் 'இப்போதேனும் வந்து விடமாட்டானா?' என்று காத்திருந்தாள்.
அதற்குமேல் அவள் மனதைப்போல உடல் ஒத்துழைக்க மறுத்தது.
தாயாரின் அறிவுரையை நினைவில் கொண்டு ஆபரணங்களை கலட்டி ஒரு பெட்டியில் பத்திரப்படுத்திவிட்டு கைகால் முகம் கழுவி உடை மாற்றிவந்து தொழுகை நிறைவேற்றி தூங்க ஆயத்தமானாள்.
அப்போதும் அவன் வரவில்லை. காலையில் நேரத்தோடு எழுந்து தயாராக வேண்டும்.
'ஏன் வரவில்லை?' மூளை குடைச்சல் கொடுத்தாலும் 'நாளை வலீமா விருந்து. வேலைகள் நிறைய இருக்கும்' என்று மனது மூளையை சமாதானப்படுத்தி தூங்கவைக்க முயன்றது.
ஒரு கட்டத்தில் இமைகளின் பாரம் தாளாமல் விழிகள் மூடிக்கொள்ள அப்படியே உறங்கினாள் ஹிக்மா.
யாருடனோ போனில் பேசிவிட்டுத்திரும்பிய ரய்யானை முறைத்தபடி நின்றிருந்தான் அவனது சகோதரன்.
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம் |Completed|
General Fiction"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும்...