-49-

764 43 4
                                    

இருள் தன் அதிகாரத்தை பூமியில் நிலைநாட்டத் தொடங்கியது. இருளுக்கு கட்டுப்பட்ட பகலவனும் தன் கதிர்களை வாரிச் சுருட்டிக்கொண்டு கடலுக்கடியில் படுத்துவிட மின் விளக்குகள் பாய்ச்சிய ஒளி வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது காலி முகத்திடல்.

கடற்காற்றில் தாக்குப்பிடிக்க ஹிக்மாவின் பிண் குத்தப்பட்ட ஷால் வெகுவாகப் போராடிக் கொண்டிருந்தது. அவளது கைகள ஷோலை உடலோடு சேர்த்து பற்றியிருக்க மேலதிக பாதுகாப்புக்காக ரய்யானின் வலிய கரங்கள் அவளை சுற்றியிருந்தன.

அங்கிருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காதல் ஜோடிகள் என்பதை அவர்களது உடல்மொழியிலேயே தெரிந்துகொள்ள முடிந்தது. ரய்யானும் ஹிக்மாவும் அதுபோன்ற காதல் ஜோடிகளா என்பது திண்ணமில்லை என்றாலும்
ஹிக்மா மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தாள்.

சில மாதங்களுக்கு முன்பு திருமண வாழ்க்கையை எண்ணி அவள் அடைந்த கவலையும், சிந்திய கண்ணீரும் இன்று தடம் தெரியாமல் போயிருந்தன. படைத்தவனுக்கு மறவாமல் நன்றி சொல்லிக்கொண்டாள்.

ஹிக்மாவின் முகத்தில் இனி வேறென்ன வேண்டும் என்னுமளவு சந்தோஷம் சிதறிக்கிடந்தது. ரய்யானும் வேண்டாத நினைவுகளை உதறித் தள்ளிவிட்டு அவளது சந்தோஷத்தில் இணைந்து கொண்டான். இருவரும் பிடித்ததை பேசியபடி நடைபோட நேரமும் இனிமையாக கரைந்தது. பிறகு கடல்நீரில் கொஞ்சம் கால் நனைத்துவிட்டு அறைக்கு திரும்பினர்.

வரும்போது இரவுணவையும் வாங்கி வந்திருந்தனர். உணவு உட்கொண்டு முடிக்கும்வரை ஹிக்மா கடற்கரை சுவாரசிங்களை ஓயாமல் பேசிக்கொண்டிருக்க மறுபடியும் பழைய நினைவுகள் ரய்யானின் மனதை பிசைய ஆரம்பித்தது. சாப்பிட முடியாமல் போதுமென்று எழுந்தவன் தனிமையைநாடி பல்கேணியில் தஞ்சமடைந்தான்.

சாப்பிட்டு முடித்ததும் எடுத்த போட்டோக்களை பார்க்கவென அவளும் கட்டிலில் அமர்ந்துவிட ரய்யானை கவனிக்கவில்லை.

அவனோ பெருங் குழப்பத்தில் மூழ்கியிருந்தான்.

'மனைவியிடம்டம் தன் கடந்தகாலத்தை பற்றி பகிர்ந்து கொள்வது அவசியமா?' என பல்கேணியில் நின்றவாறே திரும்பி அவளைப் பார்த்தான். அவளோ புகைப்படங்களில் ஆழ்ந்து இருந்தாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Wo Geschichten leben. Entdecke jetzt