-35-

827 43 1
                                    

ஒருமணித்தியாளம் ஓயாது அடித்த மழையின் வீரியம் மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது.

மழை முழுவதும் ஓய்ந்து வீடுவந்து சேருவதற்குள் இருவருக்குமே போதுமென்றானது.

வந்துசேர்ந்ததும் இஸ்மாயிலும் இருவரையும் கடிந்து கொண்டார்.

"இந்த பேயாப் பெருமழைல புறப்பட்டு வரனுமா. கொஞ்சம் பொறுமையா வந்திருக்கலாமே?"

தலைதுவட்டி முடியவே ரய்யான் 'ஹக்ஷ்.. அக்ஷ்.. க்ஷ்.. க்ஷ்.. க்ஷ்..' என ஆரம்பித்து விட்டான்.

ஹிக்மாவுக்கும் ஓரிரு தும்மல் போனது. ஆனால் அவனுக்கு பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பது போல கணக்குவழக்கின்றி போய்க் கொண்டிருந்தது.

கட்டுப்படுத்த முடியாமல் ரய்யான் படுத்துவிடவே அவளுக்கும் பாவமாக இருந்தது. நோன்பிருப்பதால் 'சமஹன்' குடிக்க கொடுக்கவும் முடியவில்லை.

அஸர் தொழுததும் ஹிக்மா சமையல் வேலைக்காக கீழேசென்று விட்டாள். எனினும் மனசு மட்டும் ரய்யானிடமே இருந்தது.

முயன்று வேலைகளை சீக்கிரமே முடித்துக்கொண்டு அவனிடம் சென்றாள். அப்போதும் படுத்தே கிடப்பதைப்பார்த்து அருகில் போனாள்.

ரய்யான் நடுங்கிக் கொண்டிருக்க புறங்கையை அவன் நெற்றியில் வைத்தாள். அவனது உடல் அனலாகக் கொதிப்பதை உணர்ந்து திகைத்தாள்.

உடனே போர்வை எடுத்துவந்து அவனைப் போர்த்தினாள். அப்போதுமே நடுக்கம் குறைவதாக இல்லை. அவனது உள்ளங்கை, கால்களை தேய்த்தவிட்டு சூடேற்ற முயன்றாள்.

இரண்டு மணித்தியாள இடைவெளியில் முகமெல்லாம் சிவந்துபோய் ரய்யான் ஆளே மாறியிருந்தான். அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

கண்ணை துடைத்துக்கொண்டு இரண்டு பெரசிட்டமோல் எடுத்துவந்து அவனை எழுப்ப சிரமப்பட்டு கண்களை திறத்தான்.

"ரய்யான்! இந்தாங்க இதைக் குடிங்க"

"இன்னும் நோன்பு திறக்கல்லயே"

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now