படுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஹிக்மா உறங்கிவிட்டாள். ரய்யானுக்குத்தான் நேரமாறுதலால் தூக்கம் கண்ணைத்தொட மறுத்தது.
ஒவ்வொரு பக்கமாக புரண்டு எப்படியாவது தூங்கிவிட வேண்டுமென போராடிக் கொண்டிருந்தான்.அப்படி அவன் அவள்புறம் திரும்பி படுத்திருக்க அவளும் எதேச்சையாய் இவன்பக்கமே புரண்டாள். இரவு விளக்கின் மங்கிய வெளிச்சத்திலும் அவள் வதனத்தின் வரிவடிவம் அவனை ஈர்க்க தன்னை மறந்து நெருங்கினான் அவளை.
அவள்மூச்சு சீராக அவன் முகத்தில் மோதியது. ஒழுங்கற்று கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான். சண்டைபோட்டு தூங்கினாலும் இப்போது எவ்வித உணர்வுமில்லாது நிர்மலாக காட்சி தந்தாள்.
அவளை கண்ணெடுக்காமல் ரசித்துக்கொண்டிருக்க தூக்கத்தில் இன்னும் அவனை நெருங்கியவள் கையையும் தூக்கி அவன்மீது போட்டுத் தூங்கினாள்.
அவளின் அருகாமை ஏற்படுத்திய தித்திப்பில் ரய்யானும் மனநிறைவோடு கண்ணயர்ந்தான்.
ஏதேதோ இனிய கனவுகள் அவன் தூக்கத்தை ஆக்கிரமித்திருக்க இடையூறாக ஸஹர் அலாரம் அடித்து அவனை அதிலிருந்து மீட்டெடுத்தது.
அலாரத்தை நிறுத்த எத்தனிக்கும் போது அவனது வலதுகையில் சுமையேறியதாக உணர்ந்து. விழிதிறந்து பார்க்க அவன் கையில் தலைவைத்து படுத்திருந்தள் ஹிக்மா.
மெதுவாக தலையிலிருந்து கையை எடுத்துவிட முற்பட தூக்கத்தில் முனகிக்கொண்டே அவனை அசையவிடாமல் பிடித்துக்கொண்டாள். சிறிது நேரம் அவள் பிடியிலே படுத்திருந்தான். விடியும்வரை அப்படியே இருந்திட அவனுக்கு ஆசைதான். ஆனால் நோன்புநோற்க வேண்டுமே.
ஒருமுறை அடித்து ஓய்ந்த அலாரம் மறுபடியும் அடித்திட அவள் முனகலை பொருட்படுத்தாது மெதுவாக அவளை விலத்திவிட்டு எழுந்து அலாரத்தை நிறுத்தினான்.
ஓரிருமுறை அவளை எழுப்பிப் பார்த்தான். அவளிடமிருந்து 'ஊம்ம்.. ஆஹ்..' முனகல் மட்டும் வந்ததே தவிர கண்ணை திறக்கக் காணோம்.
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம் |Completed|
General Fiction"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும்...