'நல்ல சம்பந்தம்'
'நல்ல குடும்பம்'
'அருமையான பையன்'
'படித்த பையன்'
'நல்ல குணம்'
அடுத்தவர்கள் பேச்சைநம்பி உங்கள் மகளை நல்லபடியாக வைத்துக் கொள்வார்களென்று நம்பிவிட்டீர்களே வாப்பா! இங்கே சொத்துசுகமும், பணத்திமிரும் மட்டுந்தான் இருக்கிறது''படித்து பட்டம் பெற்றும் என்ன பயன் மற்றவரிடம் பண்பாக பேசத் தெரியவில்லையே'
அப்படியே எவ்வளவு நேரம்தான் வெற்றுத் தரையை வெறித்தபடி கண்ணீர் வடித்தாளோ தெரியவில்லை. சுயஉணர்வு வந்து நேரத்தை பார்க்கும்போது அது நள்ளிரவு பண்ணிரெண்டை கடந்திருந்தது.
ஹிக்மா இன்னும் இஷா தொழுதிருக்கவில்லை. எழுந்து குளியலறை சென்று தன்முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். கண்களில் இனி ஈரமேயில்லை என்னும்மளவுக்கு அழுது முடித்தாயிற்று.
முகத்தில் பலமாக நீரடித்து சுரத்தையற்று போயிருந்த முகத்தை உணர்வித்தாள்.
வுழு செய்துவந்து தொழுகையை நிறைவேற்றி அள்ளாஹ்விடம் தன்நிலைமை எடுத்துறைத்தாள்.
'ஏன் எனக்கு இப்படி நடக்குது யாரப்பே! நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்?! ஏன் என்வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது?' என முறையிட்டாள்.
'அறியாமல் யாருக்கேனும் கெடுதல் செய்திருந்தாலோ ஏன் நினைத்திருந்தாலோ கருணைகொண்டு என்னை மன்னித்துவிடு யாள்ளாஹ்!'
'என்மீது உண்மையாகவே அன்பு வைத்திருக்கும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த திருமண பந்தத்தில் இருந்து என்னை விடுவித்துவிடு யா ரஹ்மானே! நான் உன்னை கெஞ்சி கேட்கிறன்!' என கண்ணீரின் துணையுடன் மன்றாடினாள்.
வீட்டைவிட்டு கிளம்பியவன் காரை எடுத்துக்கொண்டு மலைநாட்டின் காடு மேடெல்லாம் சுற்றி அலைந்தான்.
'நாளைக்கே தாயாரை வைத்தியரிடம் அழைத்து சென்று சிகிச்சைக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்'
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம் |Completed|
General Fiction"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும்...