'சந்தோஷமா?! அதை நேற்றே உங்கள் அருமைமகன் வேரோடு பிடுங்கியெறிந்து விட்டாரே' என மனதால் நினைக்கமட்டுமே முடிந்தது அவளால்.
"என்ன தங்கம்? என்னமா நடந்திச்சி? ஏதாவது ஏசிட்டானா?" ஆயிஷா அவளது கண்ணீரைக்கண்டு பதறிப்போய் கேட்க
உடனே புறங்கையால் கண்களை துடைத்துவிட்டு
"ஐயோ மாமி! நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னுமில்லை. நீங்க டென்ஷனாகாதிங்க. நேத்து வீட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து வீட்டு நினைப்பு. அதான் நீங்க கேட்டதும் அழுகை வந்திருச்சி. வேறொன்னுமில்ல!"ஹிக்மாவின் பேச்சு நம்பும்படியாக இருந்தாலும் தன் மகனை நம்பமுடியததால்
"உண்மைதானே சொல்ற?
ரய்யான் ஒன்னும் சொல்லலையே? பயப்படாம என்கிட்ட சொல்லும்மா. நான் அவங்கிட்ட பேசிக்கிறன்"இவ்வளவு கனிவான தாய்க்கு மகனாய்ப்பிறந்தும் இத்தனை மூர்க்கனாக இருக்கிறானே.
'மகன் செய்ததை சொல்லி தன்மேல் அளவிலா பாசம் வைத்திருக்கும் இந்த நோயாளித்தாயாரை ஏன் வருத்த வேண்டும்? மகனைப்பற்றி அறிய நேர்ந்தால் அதையெண்ணி வருந்தியே இன்னும் நோயை இழத்துக்கொள்வார்' ஆயிஷாவின் நிலமையை கருத்தில்கொண்டு வலியை விழுங்கி வார்த்தைகளை மட்டும் அவரிடம் பகிர்ந்தாள்.
"அப்படி எதுவுமில்லை மாமி. நீங்க தேவையில்லாம கவலை படாதிங்க. அது உங்க உடம்புக்கு நல்லதில்ல"
"என்னோட மருமகளைப்பத்தி கவலைப்பட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நானென்ன செய்யனும் செய்யக்கூடாதுனு நீ சொல்லத் தேவையில்லை" என்று திடீரென ஆயிஷா குரலை உயர்த்த ஹிக்மா மௌனமானாள். பிறகு
"மாமி! உங்களுக்குத்தான் ஒழுங்காவேவே நடிக்க வரலையே. எதுக்கு இந்த வீணான முயற்சி?"
ஹிக்மா கண்டுபிடித்து விட்டதை அறிந்து ஆயிஷா சிரிக்க ஹிக்மாவும் அந்த சிரிப்பில் இணைந்து கொண்டாள்.
"எப்படி பேர்பெக்ட்டா நடிச்சி ஏமாத்தனும்னு கேட்டு தெரிஞ்சிகங்கமா" அறைவாசலில்
இருந்து வந்த குரலில் ஹிக்மாவின் சிரிப்பு துடைத்தெடுக்கப்பட்டது.
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம் |Completed|
General Fiction"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும்...