-21-

755 40 2
                                    

ரய்யானிடம் திரும்பிய ஆயிஷா

"நான்தானே பேசிட்டு இருக்கனே. அப்படியென்ன உனக்கு அவசரம்" பட்டென்று அவனை கடிந்து கொள்ளவும் ரியாஸ் தம்பியை 'ஏன்டா?' என்பது போல பார்த்தான்.

"உம்மா சொல்லி முடிக்கட்டும். நீங்க சொல்லுங்கமா" என்று ஆயிஷாவுக்கு எடுத்து கொடுத்தான்.

"உங்க ரெண்டு பேருடைய சம்பாத்தியத்துல இந்த வீடு கட்டப்பட்டிருக்கலாம். உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதேபோல என்னோட மருமகள் மாருக்கும் பேத்தி பேரனுக்கும் உரிமை இருக்கு. நாநாவும் தம்பியும் அதை மனசுல வச்சிகங்க" அதே கண்டிப்புடனே கூறினார்.

உடனே ரியாஸ்

"ஐயோ என்ன பேசுறீங்கமா. நாங்க இங்க இருக்கும் போது உங்க மருமகளும் பேத்தி பேரன் மட்டும் எங்க போயிடப்போறாங்க. எங்களோடதானே இருப்பாங்க" என்று சாந்தப்படுத்தி தண்ணீர் அருந்த வைத்தான்.

அதன் பிறகு ஆயிஷா ரய்யானையும், ரியாஸையும் அருகில் அழைத்து இருவரது நெற்றியிலும் முத்தமிட்டு கடிந்து கொண்டதற்காக மன்னிப்பு வேண்டினார்.

"என்னம்மா நீங்க " என அவரை தடுத்து ஆயிஷாவின் நெற்றியிலும் முத்தமிட்டு எழுந்தனர்.

ரய்யானின் கையை பிடித்து

"ரய்யான் எதையும் செய்யும்போதும் பேசும்போதும் நிதானம் வேணும் ராஜா. நாங்க பேசுறது முக்கியந்தான். இருந்தாலும் மத்தவங்க சொல்ல வர்றதை புரிஞ்சிக்கலைனா கூட பரவாயில்லை பொறுமையா காது குடுத்து கேட்கனும். அடுத்தவங்க மனசில் என்ன இருக்குனு தெரியாம வார்த்தையை விட்றகூடாது மகன் "

ஹிக்மாவின் மனமோ
'மத்தவங்க மனசில் என்ன இருக்குன்னு தெரியாம பேசினாலும் பரவாயில்லை. ஆனால் உங்க மகனுக்கு மத்தவங்களுக்கு மனசு இருப்பதே தெரியாதே மாமி'

ஆயிஷாவின் அறிவுரைக்கு பிறகு ரய்யான் அமைதியாகிவிட 'தம்பியை பார்த்துக்கொள்' என்று மூத்த மகனிடம் கண் ஜாடை செய்தார். அவனும் 'கவலை வேண்டாம். நானிருக்கிறேன்' என்பதாக  ஜாடையில் தாயாருக்கு வாக்களித்தான். பிறகே ஆயிஷா நிம்மதியானார்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ