-23-

744 43 1
                                    

விடிந்ததும் ரய்யான் தனது விசா, பாஸ்போர்ட் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றான்.

காலையில் வீட்டைவிட்டு சென்றவன் பொழுது சாய்ந்த பின்னும் வீடு திரும்பவில்லை. ஆனால் அவன் கண்ணில் படாததே ஹிக்மாவுக்கு நிம்மதியை தந்தது.

மீண்டும் மத்திய கிழக்கிற்கு திரும்புவதற்கான அலுவல்களை முடித்துவிட்டு மாலையில் நண்பனை சந்திக்கச் சென்றிருந்தான்.

தான் மீண்டும் இந்த வாரமே வெளிநாடு திரும்பப் போவதாக ரிமாஸிடம் சொல்ல

"திரும்பிப் போறதை பத்தி எதுவும் டிசைட் பண்ணலனு சொன்னியேடா. இப்ப என்ன சடெனா போறேன்னு வந்து நிக்கிற?" ஆச்சரியத்துடன் நண்பன் கேட்க வீட்டில் சிறிய பிரச்சினை என்று மட்டுமே சொன்னான்.

"அதுக்காக இவ்வளவு அவசரமா போகனுமாடா? அப்படியென்ன பிரச்சினை. டீச்சர் மௌத்தாகி கொஞ்சநாள்தான் ஆகியிருக்கு"

"இந்த ஒன்னரை மாசமும் நான் பொறுத்தது போதாதா. பேசிப்பேசி உம்மா மனசை மாத்தினதும் இல்லாம இன்னைக்கு வாப்பாக்கும் எனக்கும் சண்டை மூட்டி வச்சிட்டா. ஷிரீனோட பிரச்சினை டைம்ல கூட வாப்பா எனக்கு ஒருவார்த்தை ஏசிப்பேசல ஆனால் இவளால இன்னைக்கு. எனக்கு அவள பார்க்க பார்க்க உள்ளுக்குள்ள எரியுது!" மனதில் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை நண்பனிடம் கொட்டினான்.

"Sabr! sabr!! (பொறுமை!)" ரய்யானின் தோளைப்பற்றி அமைதிப் படுத்தினான்.

"என்னால முடியலடா. தலாக் பண்ணறதும் இப்போதைக்கு சாத்தியமில்ல" என்றதும் அதிர்ந்தான் ரிமாஸ்.

"என்னடா தலாக்னு இவ்வளவு சர்வசாதாரணமா சொல்லுற.
நீ சரியில்ல ரய்யான்.
எதையும் செய்ய முன்ன அள்ளாஹ்வை பயந்துக்கோ!"

"என் நிலமை உங்க யாருக்கும் விளங்காதுடா. நீயாவது என்னைப் புரிஞ்சிப்பனு நினைச்சித்தான் வந்தேன். நீயும் ஏமாத்திட்ட" என எழுந்துகொள்ள அவனின் கையைப் பற்றித் தடுத்து நிறுத்தினான்

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now