-37-

797 37 2
                                    

அவள் சண்டைபோடாமல் வழிவிட்டு ஒதுங்கி நிற்பதை விரும்பாமல் அவளைக் கொஞ்சம் வெறுப்பேற்றி ரசிக்க எண்ணினான்.

ஹெயார் க்ரீமை பூசிவிட்டு முடியை ஒவ்வொரு ஸ்டையில் செய்து பார்ப்பதும் பின்பு கலைப்பதுமாக அவளது நேரத்தையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருந்தான்.

கண்ணாடியை பார்த்துவிட்டு வழிவிடுவான் என்று ஹிக்மா காத்திருக்க அவனோ அப்போதைக்கு அங்கிருந்து அசைவதாக இல்லை.

ஒருகை ஷோலைப் பிடித்திருக்க மற்ற கையிலும் வாயிலுமாக குண்டூசிகள். எவ்வளவு நேரந்தான் அப்படியே ஒரே நிலையில் நின்றிருப்பது. நேரம்வேறு போய்க் கொண்டிருந்தது. பொறுமையிழந்தாள் ஹிக்மா.

வாயில் குண்டூசியை கடித்து பிடித்திருந்ததால் நகருமாறு வாயைத் திறந்து கூற முடியவில்லை.

"ஊஹூம்ம்ம்... ஹூஹூம்ம்ம்ம்...உம்ம்..." அவள் சத்தத்தில் திரும்பினான் ரய்யான்.

பாதி தயாராகி நின்றிருந்தவளை 'இதென்ன கோலம்' என்பதுபோல நக்கலோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு

"என்னதிது.. தலைப்பாக்கட்டுப் போல இருக்கு. இப்படியேவா தொழ வரப்போறிங்க"

கேலிசெய்கிறான் என்பது தெளிவாகக் தெரிந்தாலும் இது அவனுடன் மல்லுக்கு நிற்கும் நேரமில்லை. இப்போதைக்கு ஷோலை முழுவதும் சுற்றிக் கட்டிக்கொண்டு தயாராக வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்தது.

இன்னும் அவன் வழி விடவில்லை. முதலில் அவனை நகர்த்த வேண்டும்.

'ஊஊஊஙங்...' என்று அவனை திரும்பவும் நகரச்சொல்ல இன்னும் வாயிலுள்ள ஊசியை எடுக்காமலே பேசுவதைக் கண்டு அவனுக்கு ஒரே சிரிப்பு.

சிரிப்பதை பார்த்ததும் சுர்ரென்று கோபம் ஏறியது அவளுக்கு.

'ஊஊம்ம்...!' என்று உறுமிடவே. திட்டுகிறாள் என்று புரிந்தும் ரய்யான் பல்லைக்காட்டிக் கொண்டிருந்தான்.

சிறிதும் யோசிக்காமல் கையில் பிடித்திருந்த குண்டூசியால் அவன் தோளில் படக்கென குத்திவிட்டாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now