நள்ளிரவு கடந்து களைத்துப்போய் இல்லம் திரும்பிய ரய்யான் அறையில் விளக்கு ஒளிர்வதைகண்டு யோசனையுடன் உள்ளே நுழைந்தான்.
அத்தனை பெரிய கட்டிலை விடுத்து சோபாவில் தூங்கும் மனைவியை ஆச்சரியமாக பார்த்தான். நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்த துணிகளை கண்டு இன்னும் ஆச்சரியம் கூடிற்று.
தாமதியாமல் உடைமாற்றி தூய்மையாகிவந்து ஹிக்மாவை கட்டிலில் கிடத்துவதற்காக கைகளில் ஏந்தினான்.
அவன் தொட்டுத் தூக்கியதில் உறக்கம் நடுவில் குழம்பிட கனவிலிருந்து மீளாமல் கண்கள் மூடிய நிலையில் மனதில் ஒட்டியிருந்த கோபத்தில் ஏதேதோ பேசினாள். ஆனால் அனைத்தும் தெளிவற்ற உளறல்களாகவே வெளிவர அள்ளிக்கொண்டு போய் கட்டிலில் வளர்த்தினான். சிறிதுநேரம் சிரித்தபடி அவளது உளறல்களை ரசித்தான். பின்
"சரி சரி தூங்குங்க. காலைல பேசலாம்.." என்று தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான்.
அவள் பேச்சு ஓய்ந்ததும் நெற்றியில் இதழ்பதித்துவிட்டு
தன்னிடத்தில் வந்துபடுத்தான்.காலையில் எப்போதும் போல ரய்யானுக்கு முன்பாக துயிலெழுந்தாள் ஹிக்மா. வழமைபோல குளியலறைக்கு போக முற்பட பக்கத்தில் படுத்திருந்தவன் பார்த்ததும் முந்தைய நாளின் நிகழ்வுகள் கோர்வையாக நினைவில் உதித்தன.
பலதையும் சிந்தித்தவாரே காலைக் கடன்களை முடித்துவந்து தஹஜ்ஜுத் தொழுகை நிறைவு செய்தாள். இப்போது ஒவ்வொரு தஹஜ்ஜுத்திலும் இருவருக்கும் சேர்த்தே துஆ செய்தாள்.
பஜ்ருக்கு பாங்கு சொல்லியும் ரய்யான் எழாமல் தூங்குவதை வைத்து இரவு நன்றாகவே தாமதித்து வந்திருப்பது புரிந்தது. பாவமென்று சிறிதுநேரம் தூங்கவிட்டாள்.
சூரிய உதயத்திற்கு நாற்பது நிமிடங்கள் மீதம் இருக்கையில் ரய்யானை தொழ எழுப்பினாள்.
"எழும்புங்க.."
"டைம் ஆகிடுச்சி.. எழும்பி தொழுங்க. இல்லாட்டி கலா ஆகிடும்"
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம் |Completed|
General Fiction"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும்...