-46-

813 41 0
                                    

முழுவதும் தயாராகி முடித்த ஹிக்மா கிளம்பாமல் கடைசி நிமிட பதற்றத்துடன் எதையோ தேடினாள்.

'ஏற்கனவே தாமதம். இதில்  மறுபடி என்னத்தை தேடிக்கொண்டு நிற்கிறாள்?'

அவளிடம் கேட்பதை விடுத்து தனக்குள்ளே பேசினான் ரய்யான். ஆனால் அடுத்த நொடியே அவள் எதனை தேடுகிறாள் என்று தெரிந்ததும் அவளிடம் கேட்டான்.

"என்ன தேடுறீங்க?"

"நான் என்ன தேடினா உங்களுக்கு என்ன?" அவனிடம் திரும்பாமலே சொல்லிவிட்டு தேடினாள்.

"நீங்க இந்த போனைத்தான் தேடுறீங்களோன்னு நினைச்சன்" ரய்யான் அசிரத்தையாக போனை தலைக்குமேலாக தூக்கிப்பிடித்து வினவி வழமைபோல குறும்பாய் புன்னகைத்தான். போன் ஹிக்மாவின் கவனத்தில் பதியவில்லை.

'நேற்று முகம் பார்க்காமல் புறக்கணித்தது இவன்தானா?' என்று சந்தேகிக்கும் அளவுக்கு இன்று முகமலர்ச்சியுடன் இருந்தவனை கண்டதும் அவன் புன்சிரிப்பில் ஹிக்மா நேற்றைய சோகத்தை மறந்தாள். தன்னை மறந்து அவன் முறுவலில் திழைத்தாள். மறுபடியும் அவனிடம் மனம் சரிய அதற்கான நேரம் இதுவல்ல உணர்ந்து நொடியில் மீண்டுவந்தாள். அதை மறைப்பதற்காக சட்டென வார்த்தைகளை கையில் எடுத்தாள்.

"ம்ப்ச்... டைம்வேற போயிட்டு இருக்கு. இப்ப எதுக்கு போனை ஒழிச்சு வெச்சீங்க?" முடிந்த மட்டும் சிடுசிடுத்தபடியே அவனை கேட்டாள்.

"நீங்க கேட்கிறது உங்களுக்கே அநியாயமா படலையா? இந்த கீறல்விழுந்த போனை சும்மா குடுத்தாலும் எவனும் வாங்க மாட்டான். இதை ஒழிச்சுவேற வெக்கனுமா. நேத்து கார்லயே விட்டு வந்துட்டீங்க. பாவம்னு எடுத்திட்டு வந்தா.." கேலிச்சிரிப்போடு கூற வெடுக்கென அவன் கையில் வைத்திருந்ததை பிடுங்கிக்கொண்டு

"நீங்க என்ன சொன்னாலும் என்னோட போன் எனக்கு பெருசுதான்" என்றாள் முறைப்போடு

"அப்ப அந்த பொக்கிஷத்தை பத்திரமா எடுத்து வெச்சதுக்கு ஒரு தான்க்ஸ் சொல்லலாமே"

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Wo Geschichten leben. Entdecke jetzt