22-கல்லுக்குள் ஈரம்

1.9K 55 2
                                        

திருமணம் முடிந்த கையோடு ஆபீஸ் போகின்றோம் என்ற எந்த உணர்வுமின்றி சிவா ஹாஸ்பிடலில் ஏதோ மீட்டிங் என்று விட அஷ்வினும் கிளம்பி போக வேண்டிய நிலை தான் ஏற்பட்டது.

சென்றதுமே அஷ்வினை கேபினுக்கு அழைத்து வீட்டு பத்திரத்தை அவன் கையில் கொடுத்தான். "என்ன சார் இது?" என்று தயக்கத்தோடு கேட்வனிடம் "திஸ் இஸ் போர் யூ அஷ்வின் நீங்க இந்த வீட்ட வாங்கிட்டு சக்தியோட பங்க அத்தைக்கு பணமாக கொடுக்க போறன்னு அத்தை என்கிட்ட சொன்னாங்க அந்த பணத்த. அத்தை சக்திக்குன்னு முடிவு பன்னி இருந்தாங்க பட் என் சொத்து முழுக்கவும் சக்திக்கு தானே அவளூக்கு எதற்கு இந்த வீடு ஸோ சக்தி சார்பா உங்களுக்கு இந்த வீட கிப்டா கொடுக்குறோம் இதுல சக்தி சைன் பன்னிட்டா" என்றதும் "அய்யோ வேண்டாம் சார்" என்றான் தய்க்கமாக "டேக் இட் மேன்" என்று விட்டு அவன் ஷோல்டரை தட்டி விட்டு எழுந்து சென்று விடவும் அஷ்வின் அந்த பேப்பரை எடுத்து வைத்து கொண்டான்.

அதன் பிறகு மீட்டிங்க நடந்தது.மீட்டிங் நடுவே சக்தியின் அழைப்பு வரவும் மீட்டிங்கில் எக்ஸ்யூஸ் சொல்லி விட்டு அட்டென்ட் செய்தான். அதை ரசித்து பார்த்து கொண்டு இருந்த அஷ்வின் நிஜமாகவே சந்தோசப்பட்டான் இதுவரை ஆயிரக்கணக்கான மீட்டிங்கில் கலந்து கொண்ட போது எல்லாம் எந்த அழைப்பு வந்தாளும் அட்டென்ட் செய்யாது தன் பேச்சில் கண்ணாக இருப்பார் ப்ரசாத சார்  ஆனால் இன்று எங்க சக்தி கால்க்கு ஒரு ரிங்கிலே அட்டென்ட் செய்து "சொல்லு சக்தி" என்று சொல்லி கொண்டே மீட்டிங்கை நிறுத்தியது அவனுக்கு பிடித்தது.

"சிவா சார் நீங்க சொன்ன அந்த ரிப்போடர் காலைல தான் கால் பன்னார் சரின்னு ஆதாரத்த எடுத்துட்டு போகலாம்ன்னு தேடுறேன் என் லெப்ல அந்த வீடியோவே இல்ல அதோட என் மொபைல்ல இருந்த மெமரிகாடும் இல்ல  இப்போ நான் என்ன பன்றது சார் அய்யோ ஒரே பதற்றமா இருக்கு சார்"என்றாள் பதற்றத்தோடு

உடனே நெற்றியை தடவி விட்டு  அஷ்வினை நோக்கி "எக்ஸ்ப்லைன் பன்னுங்க அஷ்வின்" என்று கூறி மேசை மேல் இருந்த தாளை கண்களால் காட்டி விட்டு வெளியே சென்று விட்டான்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora