23-உறவை தேடி

1.7K 46 0
                                        

 நேராக ஹாட்டேல் சென்று ப்ரஷ்ஷாகி தாராவை உண்ண வைத்து உறங்கவும் வைத்து விட்டு தான் சக்தி அந்த  முகவரிக்கு சென்றாள்.

ஹாலிங் பெல் அடித்ததுமே ஒரு அரூபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட வயதான ஒருவர் வந்து கதவை திறந்து "யார் வேண்டும்" என்று கேட்டார்
அந்த மனிதரின் முகசாயல் ஒன்றே போதும் சிவப்ரஷாதின் தந்தை அல்லது அவர் சொந்தங்கள் என்பதை அறிந்து கொள்ள

தன்னை ஒருநிலை படுத்தி கொண்ட சக்தி "ஐயம் சிவா'ஸ் வைப்" என்றதும் அவளை கூர்ந்து நோக்கி விட்டு "ஐ நோ ஐநோ" என்றவர் "உள்ளே வாங்க" என்று அழைத்து உட்கார வைத்து விட்டு "ப்ரஷாத் ஷோவ்ட் யுவர் போட்டோ மா.. பட் ஐ குட்டுன்ட் ரிமம்பர் ஐயம் சாரி" என்று விட்டு  அவளுக்கு நேராக அமர்ந்து கொண்டார் சக்தி வீட்டை சுற்றி பார்ப்பதை கண்டு "இங்க நான் தனியா தான் மா இருக்கேன். பட் வேலைக்கு எல்லாம் ஆளுங்க இருக்காங்க" என்றதும் "நீங்க கல்யாணத்துக்கு ஏன் வரலை?" என்று கேட்டதும் "ஓஹ் அதுவா எக்சுவலி எனக்கு கால்ல சின்ன ஆப்ரேஷன் நடந்துச்சி அந்த டைம்ல நான் பெட் ரெஸ்ட்ல இருந்தேன்ம்மா" என்று விடவும் "நீங்க சிவா சாரோட யாரு?" என்று கேட்டாள். அவ்வளவு தான் கலகல என்று சிரித்தவர் "யார்ன்னு தெரியாம தான் இவ்ளோ தூரம் தேடி வந்தியா?" என்று கேட்கவும்

"இல்ல சார் எக்சுவலி  நீங்க அவர் அப்பாவோ இல்ல அப்பா வழி சொந்தமாக இருக்கலாமோன்னு தோன்றுதூ பட் அவர் சொந்தம்ன்னு முகஜாடை தெளிவாக சொல்லுது" என்றதும் "அது சரி நான் க்ரிஷ்ண ப்ரசாத் சிவாவோட அப்பா" என்று விட்டு அவரே "சிவாவ சார்ன்னு கூப்ட அது உங்களுக்குள்ள இருக்குற ஒப்பந்தமாக இருக்கலாம் அத நான் ஒன்னும் சொல்ல முடியாது பட் ஐயம் நாட் சார் கால் மீ மாமா" என்றதும் புன்னகைப்போடு அதை ஏற்று கொண்டாள்.  ஆனால் இது சிவாவின் அப்பா என்பது அவளுக்கு புரியாத புதிர் தான் காரணம் இறந்து விட்டதாக சொன்னாரே'

"தாரவ நீ தான் கவனிக்குறன்னு ப்ரஷாத் சொன்னார் ரொம்ப நன்றி மா" என்றதும் "அய்யோ அதுலாம் எதற்கு தாரா எனக்கு தங்கச்சி மாதிரி தான் அவள பார்த்தூக்க எதுவுமில்ல அவளே என்ன பார்த்துக்குறான்றது தான் உண்மை." என்றதும் சிரிப்போடு "அவ அம்மா மாதிரி எப்பவும் அடுத்தவங்கள கவனிக்குறதுலயே கவனமாக இருக்கா சரி நீ எந்த ஊர்?" என்றதும் தன்னை பற்றி சொன்னாள்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now