30-நானும் அவளும்

1.3K 39 2
                                    

"வாங்க சிவா வாங்க" என்று மறியாதையோடு ஷ்ருதியின் தாயாரின் வரவேற்பிலே புரிந்து கொண்டான். நம்மவள் விடயத்தை போட்டு உடைத்து இருப்பாள் அதில் இவர்களுக்கு திருப்தி தான் என்றும்.

இதற்கு மேலும் எந்த பயமும் தேவையில்லை என்று புன்னகைப்போடு  "தேங்க் யூ ஆன்ட்டி ஆமா எப்டி இருக்கீங்க?" என்று ஒரு நாசுக்காக கேட்டான். அவனது எண்ணம்  எல்லாம் தன்னவள் எங்கே என்பதால் அவனுக்கு யார் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் இருக்கவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் உடனே அவனுக்கு ஆருகில்  உள்ள ஸோபாவில் அமர்ந்து கொண்டு "எனக்கென்னாப்பா ஆமா நீ எப்டி இருக்க?" என்று அக்கறையாக கேட்டார் ஷ்ருதியின் தாய். அவனும் மென்மையாக புன்னகைத்தூ  "ஐயம் பைன்" என்றான்.

"எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு சிவா" என்றதும் அவன் யோசனையோடு நோக்கினான்  உடனே அவளே "எனக்கு நல்ல மருமகன் கிடைச்சிட்டான் என்றது எனக்கு சந்தோசம் தானே" என்றதும் சிவாவும் புன்னகைத்தான் உடனே ஷ்ருதியின் தாயின் முகத்திலிருந்த சந்தோசம் மறைந்து அமைதியாக அவன் கை தொட்டு "என்ன மன்னிச்சிறு சிவா நான் உன்ன தப்பா நினைச்சிட்டேன்" என்றார் தயக்கத்தோடு உடனே "அய்யோ அதுலாம் ப்ராப்ளமில்ல ஆன்ட்டி நீங்க வேற. நீங்க எனக்கு அம்மா மாதிரி தானே" என்றதும் தான் அவள் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டு "அப்பாடா நீ என்ன நினைப்பியோன்னு பயந்துட்டே இருந்தேன் தெரியுமா.... இப்போ தான் ரிலேக்ஸா இருக்கு"

"ஆன்ட்டி ஷ்ருதி எங்க ஆன்ட்டி?" என்று கண்களால் வீட்டை அலசியபடி கேட்டான்
அதே புன்னகைப்போடு "அவளா...அய்யோ சொல்ல மறந்தூட்டேன்பா அவ டில்லி போயிட்டா உன்கிட்ட சொல்லலையா என்ன?" என்று கேட்டதூம் இல்லை என்று தலையாட்டினான். புரியாத பார்வையோடு "சரி தான் அவ கிட்வகுறா" என்று கூறி ஏதேதோ பேசினார்கள் பின்பு விடை பெற்று வரும் முன்பு சாப்பிட கொடுத்து தான் அனுப்பினாள்.

வீட்டை விட்டு வெளியானவன்  மனதெங்கும் புரியாத சிந்தனைகள் தான் 'சொல்லாம டில்லி போயிறுக்கான்னா இது என்ன?' என்ற பலத்த சிந்தனையோடு சுதாகரை பார்ப்போம் என்று திருவின் வீட்டுக்கு சென்றான். வாசலிலே அமர்ந்திருந்த சுதாகரனின் தாய் "அடடே சிவா வாடா" என்று அழைக்கவும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now