விடியக்காலையிலே தன் உடைமைகளுடன் வெளியே வந்தவள் தாயிடம் "ம்மா நான் போயிட்டு வர்றேன் ம்மா" என்று கூறி கட்டிக்கொண்டாள் உடனே அவள் நெற்றியில் முத்தமிட்ட தேவகி "பத்து நாள் முடியும் வரை நாள் எண்ணிக்கிட்டு இருப்பேன்டா அத மனசுல வெச்சிக்கோ என்ன?" என்று கேட்டதும் "கண்டிப்பாம்மா" என்று விட்டு சகியை பார்க்க சென்றாள் அவள் உறங்கி கொண்டு இருக்கவும் அம்மாவிடம் வந்து "ம்மா அக்கா தூங்குறாமா அவள டிஸ்டப் பன்ன வேண்டாம் நீ அவ கிட்ட சொல்லிறு என்ன?" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கார் ஹார்ன் சத்தம் கேட்கவும் தாயின் கைகளை இறுக பற்றி விட்டு சட்டென்று விட்டு விட்டு விடைபெற்றவள் நேராக தன் பேக்களுடன் சென்று காருக்குள் ஏறி கொண்டாள் ஏயார் போர்ட் வரை அஷ்வின் அவளுடன் பேசவுமில்லை என்பதில் எந்த வேற்றுமையையும் உணராதவள் ஏயார்ப்போட்டில் இறங்கியதும் தான் கேட்டாள் "மாமா எதாச்சும் ப்ராப்ளமா?" என்று கேட்டதும் புன்னகைத்து விட்டு "நீ அந்த செயார்ல உட்கார்ந்துக்க" என்று விட்டு சென்று காரை பார்கிங் செய்து விட்டு வந்தான்
மெதுவாக புன்னகைத்து விட்டு அவளது கதிரைக்கு ஒரு கதிரை விட்டு உட்கார்ந்து கொண்டு "எங்க எம் டி வந்துட்டாராம் ஐந்து நிமிடத்தூல வந்தூறுவாங்க" என்றான் யோசனையோடு
"டாக்டர்ஸ் எல்லாம் வந்துட்டாங்களா மாமா?" என்று கேட்டவளுக்கு கண்களால் ஒர் இடத்தை காட்டினான் அங்கு ஒரு குழு போன்று நிறைய பெண்கள் ஆண்கள் எல்லாம் அமர்ந்தூ பேசிக்கொண்டு இருந்தனர் "அவங்க கிட்டயும் போனதும் மிங்குல் ஆகிறுவ யேன்னா எல்லாமே கிட்ட தட்ட உன் ஏஜ் க்ரூப் தான் பட் பர்ஸனல் எதுவும் ஷ்யார் பன்னிக்க வேண்டாம் என்ன?" என்று எச்சரிக்கை போன்று சொன்னவன் அவள் பதிலுக்காக காத்திருக்காது சொல்ல ஆரம்பித்தான் "அங்க போனதும் எங்க எம்டி சொல்ற மாதிரி வர்க்லாம் பன்னிட்டு மீதமுள்ள நேரத்துல தமிழ பார்க்கவோ தேடவோ முயற்ச்சி செய் அதோட யாருக்கும் டவுட் வர்ற மாதிரி பன்னிறாத" என்றான் உடனே மென்மையாக புன்னகைத்து விட்டு கோவமாக "நீங்க அக்கா எல்லாம் இவ்ளோ அசிங்க பட்ற அளவுக்கு நான் எதுவுமே பன்னிறல்ல ஸோ தயவு பன்னி என்கிட்ட இப்டி வார்னிங் தர்ற மாதிரி பேச வேண்டாம்...." உடனே "அச்சோ அதுலாம் இல்ல சக்தி எக்சுவலி யாரும் உன்னையோ என்னையோ கேள்வி கேட்குற மாதிரி ஆகிற கூடாதுல அதான் சொன்னேன். அதோட தயவு பன்னி அவன் வாழ்க்கைல யாராவது இருந்தா, எந்த ஸீனும் போடாம வந்துறு இது உக்காவுக்காக மட்டும் சொல்றது . எனக்கு உன் வாழ்க்கைல வழி காட்ட எந்த ரைட்ஸும் இல்லன்னு தெரியும்" என்றான் அவளை பேசா விடாது
BẠN ĐANG ĐỌC
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Tiểu Thuyết Chungகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
