அன்று இரவு ஒரு எட்டு மணி இருக்கும் "அம்மா.... அக்கா ஏன்ம்மா இன்னும் வரலை....?" என்று கேட்டு கொண்டே இரவுணவில் கை வைத்தாள் சக்தி. "அவ பெரியப்பா வீட்டுக்கு போயிறுக்கா நாளைக்கு வந்துறுவா, அங்க ஏதோ ஒரு பத்திரிகை கம்பேனில மெனேஜர் போஸ்ட் காலியாம் அதுக்கான இன்ட்ரவ்யூக்கு தான் போயிறுக்கா.... இன்ட்ரவ்யூ சக்ஸஸ்ன்னா சென்னைல தான் வேலை ஸோ வந்துறுவா...". என்று முழுமையாக சொல்லி முடித்த தாயின் குரலில் ஒரு விரக்தி நன்றாகவே தென்பட்டது ஆனாலும் அதை கவனிக்காதது போன்று
"அப்போ என்கிட்ட பெரியப்பா வீட்டுக்கு சும்மா போறன்னும் இன்னைக்கே வந்துறுவேன்னும் சொன்னாலே மா"
"அதுவும் அப்டியா...." என்று கடமைக்காக சொல்லி விட்டு "அதோட அந்த பையன பற்றி என்ன நினைக்கிற.....?" என்று கேட்டாள் தேவகி. அவனை பற்றிய கேள்வியை எழுப்பியதும் அவளுக்கு புக்கென்று ஆகி விட்டது ஆனாலும் எந்த வித்தயாசமும் காட்டாது கொஞ்சம் தயக்கத்தோடும் "எனக்கு தெரியாது மா இன்னைக்கு காலைல தான் தாரா எங்கன்னு கேட்டு பேசினேன் பேச்சில எதுவும் தோன்றலை பட் இப்போ" என்று தொடர்ந்தவளை தடுத்து "நான் என்ன நினைக்கிறேன்னா நீ அங்க வேலைக்கு போனா.. என்ன?" என்று கேட்டதும் சக்திக்கு ஒரு மாதிரி ஆகி விட "இல்லம்மா நான் அங்க போகலை... உங்களுக்கு பிடிக்காம எதற்கு?" என்று கேட்டவளது அருகில் வந்த தேவகி "இல்லம்மா நீ போ.... அந்த தாராவுக்கும் யாருமில்ல போல" என்று கூறி ஒரு நொடி நிறுத்தி விட்டு "நான் அந்த தம்பிக்கு கால் பன்னி ஈவினிங்கே சொல்லிட்டேன். அவர் நாளைக்கு வருவார்ன்னு நினைக்கிறேன்ம்மா" என்று கூறி தலை கோதி சென்று விட்டாள்.
காலையில் தாய் சம்மதிப்பது நல்லது என்று நினைத்த சக்தி இப்போது தாய் சம்மதித்தது பிடிக்கவில்லை எனவே தேவகியின் பின்னாடியே சென்று "என்னம்மா நீ என் கிட்ட கேட்டுடு அவங்களுக்கிட்ட இன்போம் பன்னி இருக்கலாமே" என்று எரிச்சலாக கேட்டதும் "உனக்கு தான் அவங்க வீட்ல வேலை பார்க்க பிடிக்குமே திரும்ப எதற்கு கேட்க்கன்னு தான் கேட்கலை அத விடு இப்போ தூங்கு" என்று விட்டு லைட்டை ஆப் செய்து கட்டிலில் சாய்ந்தாள் முதல் முறை தாயின் மேல் எரிச்சல் எரிச்சலாக வந்தது அவளுக்கு
ESTÁS LEYENDO
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Ficción Generalகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
