கதவு தட்டும் சத்தம் கேட்டு சட்டென்று எழுந்தூ சென்று திறந்தவளுக்கு அதிர்ச்சி தான்.
"ஹாய் தாரிணி" என்று சிரித்த முகமாக நின்றிருந்தாள் ஷ்ருதி கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தாளும் ஏதோ ஒரு வகையில் ஷ்ருதியை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கும் தான் இருந்ததே... உடனே புன்னகைத்த முகமாக கைகளை பற்றி கூட்டி சென்று அமர வைத்தாள்.
இருவரில் முதலில் யார் பேசுவது என்ற போராட்டமும் ஒரு நொடி நடக்க தான் செய்தது கொஞ்சம் வேகமாக சுதாகரித்து கொண்டு பேச ஆரம்பித்தது என்னவோ ஷ்ருதி தான் "ஹேய் தாரிணி கோல்ட் வாட்டர் இருந்த கொடுங்களேன்" என்று தான் ஆரம்பித்தாள்.
தாரிணியும் சட்டென்று கூல் வாட்டரை எடுத்து வந்து கொடுத்தாள் "ஸோ எப்டி இருக்கீங்க தாரிணி?" என்று தண்ணீரை ஒரு மிடர் குடித்து விட்டு கேட்டாள்.
"குட் உங்க கதை என்ன...?.காதுல கேட்ட வரை என்னனென்னமோ கேட்க்குது?" என்று தனக்கு தேவையான நியுஸை பெற்று கொள்வதிலே கண்ணாக இருந்தாள்.
இதை எதிர் பார்த்தேன் என்பது போன்று ஒரு பார்வை பார்த்து விட்டு "வந்து உட்காருங்க" என்றாள் ஷ்ருதி
'கதை நீண்டதாக இருக்குமோ' என்று நினைத்த படி தாரிணியும் சென்று அவளருகிலே அமர்ந்து கொண்டாள்.
"எக்சுவலி எங்க மம்மி நிஜமாகவே என்ன ஏமாற்றிட்டாங்க தாரிணி" என்றாள் சோகமாகவும் கவலையாகவும் "நான் நினைச்சேன்" என்றாள் தாரிணியும் கொஞ்சம் கோவமாக,
"ஆமா தாரிணி நீங்க தான் என்ன புரிஞ்சிப்பீங்கன்னு எனக்கு அப்பவே தெரியும் அதனால தான் உங்க கிட்ட பேசனும் ன்னு ட்ரை பன்னேன்" என்றதும் ஆர்வமாக "சொல்லுங்க ஷ்ருதி நான் கண்டிப்பா சிவாகிட்ட இத பற்றி சொல்லி புரிய வைக்கிறேன்" என்றதும் சட்டென்று அவள் கைகளை பற்றி "நோ நோ அதுலாம் வேண்டாம் நீங்க உங்க மனசோட வெச்சிகுங்க தாரிணி பிகோஸ் நானும் கல்யாணம் பன்னிட்டேன் சிவாவும் என்ன மறந்து நல்லாவே வளர்ந்துட்டார் இப்ப போயி எதற்கு? அவர் மனசு திரும்ப என்ன நினைக்கவும் வேண்டாம் கில்டியாக பீல் பன்னவும் வேண்டாம்" என்றாள்
YOU ARE READING
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
General Fictionகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
