சுற்றி முற்றிலும் தேடி தேடி வெறுத்து போன சிவா சட்டென்று ஒரு கதிரையை பற்றி அமர்ந்து கொண்டான்.... இதற்கு மேல் நிற்க கூட முடியாத நிலையாக இருந்தது அவன் நிலை
".............." மொபைல் அலறல் கூட காதில் விழாது அமர்ந்திருந்தவனை நெருங்கி வந்த ஒரு வயதான மனிதர் தான் அவனது ஷால்டரை தொட்டு ஆங்கிலத்தில் எதோ சொன்னார்.
அவர் சொன்னது காதில் விழவில்லை என்றாலும் சுயநினைவுக்கு வந்து விட்டான். மொபைல் ரிங் ஆவதை உணர்ந்து எடுத்தூ ஸ்க்ரீனை பார்த்தான் "அப்பா"
சிவாவுக்கு தற்போது ஆறுதல் தேவை அதுவும் துரோகங்களும் பொய்யுமில்லாத ஒரு உறவிடமிருந்து அவனுக்கு அவனது அப்பாவை தவிர அப்படி ஒரு உறவு இல்லையும் கூட பதற்றத்தோடும் பரபரப்போடும் கைகள் நடுநடுங்க ஒதுக்குபுறமாக சென்று ஆன்ஸ்வர் செய்தவன் கதறி கதறி அழுதானே தவிற பேசவே இல்லை க்ருஷ்ணாவும் பேசவில்லை மவுனம் பேசியது என்றே சொல்ல வேண்டும்.
அவருக்கு தெரியாதா.. பிரசவத்திற்கு சென்ற மனைவி பிணமாக வரும் போது ஏற்படும் ஆத்திரமும் கவலையும் எப்படி பட்ட கொடூரம் என்று
தனக்காவது இரண்டாம் குழந்தை அதுவும் பதினேழு வருடம் வாழ்ந்த பின்பு தான் மனைவியை பிரிய நேர்ந்தது ஆனால் தன் மகனோ காதலித்து கை பிடித்தவளோடு முழுவதுமாக ஒரு வருடம் கூட வாழகிடைக்காமல் தவித்து கொண்டிருக்கின்றான்.
ஆறுதல் கூற க்ருஷ்ணாவுக்கே வார்ததைகள் இல்லாது தான் போயிருந்தது.... "தம்பி உன் கவலை வான்அளவுன்னூ அப்பாவுக்கு புரியுது ஆனால் நீ தனியா அழுகாம அப்பா கிட்ட வந்துறுடா கண்ணா" என்றான் தன் கன்னத்தில் இருந்த கண்ணீரை துடைத்த படி பெற்றவர்
"ப்பா.... ப்பா" என்று எதையோ சொல்ல துடித்த மகனது தொண்டையை துயரம் அடைத்து கொண்டிருப்பதை உணர்ந்த கிருஷ்ணா கதறி கதறியே அழுது விட்டார்
'இறைவா என் பிள்ளைய சோதிக்குறதே தான் உன் வேலையா.... ஏன் கடவுளே அவன சின்ன பையன்ல இருந்து இப்ப வரை நீ சோதிச்சிட்டே இருக்க.... அவன ஐந்து வருஷம் தவமிருந்து பெற்றது இப்படி கலங்கி கலங்கி நிற்பதை பார்க்க தானா.... அவன மட்டும் ஏன் பல தடவை அநாதையாக்கிட்டே இருக்க நீ வெறும் கல்லு தானா.... ச்சீ" என்று கத்தி கத்தி அழுதார்
DU LIEST GERADE
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Aktuelle Literaturகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
