24-முதல் காதல்

1.7K 41 0
                                        

அன்று காலை ஆறு மணிக்கே திரு முருகன் இருவரையும் தன் வீட்டிற்கு கூட்டி போய் விட்டார் சிவாவினதும் சிந்திவினதும் வருகை கொஞ்சம் கூட திருவின் மனைவிக்கு பிடிக்காவிட்டாளும்  க்ரிஷ்ணாவின் முன் "இத பாருங்க அண்ணா உங்க பசங்கள எங்கயோ விட்டுடோம் என்ற எந்த கவலையும் இங்க வேண்டாம் சிவாவும் சிந்துவும் என் பசங்க மாதிரி தான்" என்றதும் பொண்டாட்டியின் நாடகத்தை மிஞ்சும் விதமாக "மாதிரி என்னடி மாதிரி... அவங்க நம்ம பசங்க தான்." என்றார் திரு.  எனவே க்ருஷ்ணா அங்கே இருக்க விட்டார்

திருவின் மகன் சுதாகர் சிவாவை விட மூன்று வயது இளையவனாக இருந்தாளும் சிவாவூடன் நல்ல நண்பனாக தான் பழகினான்.

மொட்டை மாடியில் தன் காலேஜ் புத்தகங்களுடன் படித்து கொண்டு இருந்தான் சிவா. எதிர் பக்க வீட்டு மொட்டை மாடி வழியாக தன்னை நீண்ட நேரமாக யாரோ பார்க்கின்றனர் என்பதை பாதி உணர்ந்து மீதி உணராமலும்  அடிக்கடி பார்த்து பார்த்து இருந்தான்.

சிவா  மீண்டும் அதே  உணர்வு வரவும் சட்டென்று தலை உயர்த்தி போது அவன் கண்ணில் சிக்கியவள் தான் ஸ்ருதிகா.... அவளுக்கு ஒரு பதினேழு வயதிருக்கும் இளமையின் கவர்ச்சியில் ஒரு தேவதையாக அவன் கண்களுக்கு தென்பட்டாள்.  ஒரு நொடி அவள் அழகில் மயங்கி தான் போனான் சிவா ஆனாலும் தன்னை சுதாககரித்து கொண்டு "ஹேய் எதுக்கு ரொம்ப நேரமாக பார்க்குற?" என்று கத்தி கேட்டான் உடனே பதில் சொல்லாது அவனை பார்த்து வெறும் புன்னகையை தான் வீசினாள். திரும்பவும் அதில் சரியும் முன்பே விழித்து கொண்டு "ஹேய் என்ன சிரிக்குற சொல்லு எதற்கு பார்க்குற?" என்று கேட்டதும்  அவளும் சண்டைக்கு தயார் என்பது போல் "என் கண்ணு நான் பார்க்குறேன் பிடிக்கலைன்னா நீ போ" என்றாள்.

"ஹேய் என்ன திமிரா? விட்டேன்னா பல்லுலாம் உதிர்ந்து போய்டும்" என்றான் திமிராக "ஆஹா நீங்க உடைக்கும் வரை எங்க கை உங்களுக்கு எண்ணை தடவிட்டா இருக்கும்"

"ஹேய் என்ன டி வாய் நீளுது விட்டேன்னா கன்னம் சிவந்துறும்" என்று கத்தி விட்டு புத்தகங்களை எடுத்து கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டான்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin