குன்னூர்.... "வாவ் என்ன ஓர் இயற்கை..." என்று எப்போதும் வியப்பவள் தான் சக்தி. "அம்மா குன்னூர் போனூம்மா" என்று தாயிடம் கேட்கும் போதெல்லாம் "உங்கப்பனும் அண்ணனும் வாங்கி வெச்ச கடன அடைக்க உங்க அக்கா ஒருத்தி உழைக்குறதே போதாது இந்த லட்சணத்துல.... குன்னூர் கோடைகானல்ன்னு சுத்தனும்ன்னு கேட்க அறிவில்லயா சக்தி" என்று தாய் திட்டி விடுவார். அதனாலே பல ஆசைகளை மனதினுள் புதைத்து வைத்திருந்தாள்.
அம்மாவை குற்றம் சொல்ல முடியாது. அக்காவின் சம்பளத்தால் எத்தனை வேலை தான் செய்ய, சக்தியை கலேஜ் படிக்க வைத்து அண்ணாவினதும் அப்பாவினதும் கடனுக்கான வட்டி கட்டி வீட்டு வாடகை கொடுத்து கரன்ட் பில்,வோட்டர் பில் என்று பலதும் செய்து விட்டு மீதமாகும் பணத்தில் தான் சாப்பாடு.
இவ்வளவும் செய்து விட்டு தாம்தூம் என்று சாப்பிட அக்கா ஒன்றும் மாதத்திற்கு ஒரு லட்சம் சம்பாதிப்பவளும் இல்லை..... சகிதாவிற்கு கல்யாணம் வேறு நிச்சயமாகிறுச்சி என்பதால் தான் தேவகி பயந்து நடுங்கினாள்.... "கடவுளே என் பொண்ணு சம்பாதிக்கிறதுல மீதமாகுறதே ஒன்பதாயிரம் அதுவும் சாப்பாட்டுக்கு, அதையும் சேர்த்தா நாங்க பட்டினி தானா நிக்கனும்..... நீ கண் திறந்து எங்களுக்கு அன்பு காட்டவே மாட்டியா...." என்று தேவகி கவலை படாத நேரமில்லை....
"கவலை படாத ம்மா.... நான் படிச்சி முடிக்க ஆறுமாசம் தான் இருக்கு.... நானும் சம்பாதிச்சி கடன் சுமைய குறைப்பேன்" என்று கூறியதும் அமைதியாகிவிடுவாள் தாய். அன்றிலிருந்து குன்னூரும் வேண்டாம் கோடைகானலும் வேண்டாம் என்று தான் இருந்தாள்.
ஆறு மாசம் கழித்து வேலைக்கு போகலாம் என்று நினைத்து இன்ட்ரவியூ போறதற்குள் தாராவின் கதை கேட்டு அவளுக்காக குன்னூர் வந்தாள்...
"என்ன மிஸ் சக்தி குன்னூருக்கு முதல் தடவையா?" என்று கேட்டு கொண்டே அழகான வீடொன்றிற்குள் இருந்து வந்தார் தாராவின் தந்தை....
தன்னையும் தன் ஆசைகளையும் கட்டுபடுத்தி கொண்டு "வரவேண்டிய அவசியம் இது வரை எனக்கு வந்ததில்ல" என்று விட்டு வீட்டினை நோக்கி நகர்ந்தாள்.
STAI LEGGENDO
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Narrativa generaleகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
