11-தமிழின் சக்தி

2K 59 3
                                        

நடு இரவில் விழித்தவள் மனதெங்கும் தமிழின் நினைவு தான் குன்னூரில் இருந்த போதூ இருவருக்கும் இடையில் இருந்த தூரம் குறைந்து இருப்பது போல் ஒர் உணர்வு அவளுக்குள்

பழைய நினைவுகளுடன் சிரித்து மகிழந்தாள் ஒரு நாள் சகியின் நண்பியின் வீட்டில் திருமணம் என்பதால் சகி தேவகியை கூட்டி சென்று இருந்தாள்

அப்போது சக்தி காலேஜ் படிக்கும் காலம் காலேஜ் முடித்து வந்தவள் பசியில் தடுமாற்றத்தோடு கிச்சனை அலசினாள் ஆனால் கிச்சனில் மிளகாய் கூட இருக்கவில்லை பசி தாங்க முடியாதவள் பல்லை கடித்து கொண்டு வயிற்றை தன் கைகலால் இறுக்கி கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்

திடீர் என்று தமிழுடன் பேசலாம். பேசினாள் தூக்கம் பசி என்று எல்லாம் மறந்து விடுவதால் பேச நினைத்தாள

வேகமாக தன் அறைக்கு சென்று மொபைலை ஆன் செய்தவள் 'ஓஹ்' ஷிட் என்று நாக்கை கடித்து கொண்டாள் காரணம் அவள் வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து நாற்பது முறை தமிழ் கால் செய்து இருந்தான் என்பதே போதாததற்கு சகிதாவும் அழைத்திருந்தாள்.... சகிதாவுக்கு கால் செய்ய முன்பு தமிழை அழைத்தாள்

முதல் ரிங்கிலே ஆன்ஸ்வர் செய்தவன் எதுவும் பேசாது மவுனமாக நின்றான் "ஹேய் தமிழ் சாரி டா எக்சுவலி நான் சார்ஜ்ல போட்டுடு ஆப் பன்னி வைத்தேன் டா சாரி" என்று கூறியும் மவுனமாகவே நின்றான்

"என்ன தமிழ் பேசாம இருக்க என் மேல கோவமா?" என்று கேட்டதும் "ஆமா" என்று விட்டு மீண்டும் மவுனம் காத்தான்

"சரி இப்போ நீ மன்னிக்க நான் என்ன பன்னனும் அத சொல்லு....?" என்று கேட்டு அவளே சமாதான கொடியை தூக்கியதும் "வீட்டு கதவ திற" என்றான்

"ஹேய் நோப்பா அதுலாம் முடியாது அம்மாவும் அக்காவும் எப்ப வேணா வருவாங்க இப்பவே நம்ம விஷயம் மாட்டிகிட்டா அக்கா தப்பா நினைப்பா ஸோ வேண்டாம் வேற எதாச்சும் சொல்லூ பன்றேன்" என்றதும் "உங்கம்மா உங்கக்கா இரண்டு பேரும் இன்னைக்கு வர மாட்டாங்க யேன்னா அங்க அடை மழையாம்... வெள்ளம் வேற வந்தாச்சாம்" என்றதும்

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now