அடுத்த நாள் காலையிலே வேகமாக சிவாவை சந்திக்க வந்த சுதா விடயத்தை சொன்னதும் "எங்க கம்பெனில கேப் புக் செய்யுறது புல் ரெக்கோட் பதிவாக தான் இருக்கும் எதுவுமே மிஸ் ஆகாது" என்றதும் "ஒகே அப்போ நான் பார்த்துக்குறேன் " என்று விட்டு சுதாகர் சென்று விட்டான் அன்று மகள் தாரகிக்கு கொஞ்சம் காய்ச்சல் என்பதால் தான் சிவா சுதாகரோடு சென்று விசாரிக்க தயாராகவில்லை...
மகள் தாயில்லா பிள்ளை இறந்த மனைவியின் நினைப்பில் உயிரோடு இருக்கும் தன் உயிரை தனியாக விட்டு போவது அவ்வளவு அவசியமில்லாது தான் சிவாவுக்கும் தோன்றியது.
நேராக விசாரித்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த சுதா "எனக்கு இந்த கேஸே புரியலை ப்பா அங்க போயி விசாரிச்சா அந்த நாள் அதே டைம்ல கேப் புக் பன்னது உங்க அப்பாவோட ஐ டி ல தான் அதோட அதே மாதிரி சில தடவையும் புக் செய்ய பட்டு இருக்கு எல்லாமே நம்ம அங்கிளோட ஐ டீ ல தான்." என்றதும் சிவாவுக்கு மொத்தமுமாக ப்லேன்க் ஆகி தான் போனதூ
"இப்போ ஆங்கிள் வேற உயிரோட இல்ல இல்லேன்னா நானே அவர்கிட்ட விசாரிச்சு இருப்பேன்" என்றான் சுதாகர் உடனே சிவாவும் பதற்றத்தோடு "அப்பாவ என்ன விசாரிப்ப அவர் எனக்கு துரோகம் பன்னுவார்ன்னு சொல்றியா" என்று கோவமாக கேட்டான்.
"ச்சீ என்ன பேசுறீங்க அப்டிலாம் இல்ல அங்கிள் கிட்ட அவர் ஐ டி எப்பவாச்சும் காணாமல் போனதுண்டா? ன்னு கேட்ப்பேன் இல்லா யாராவது எடுத்தாங்களான்னு கேட்ப்பேன்? இல்லேன்னா கொஞ்சம் சந்தேகமாகவும் கேட்ப்பேன்" என்றான் முடிவாக
"ஹம் போலீஸுக்கு சந்தேக பார்வை தானே அழகே..." என்று விட்டு "இப்போ என்ன பன்ன போற?" என்று கேட்டான் சிவா பதறாது
"எனக்கு சந்தேகம் வர இன்னொரு காரணம் இருக்கு" என்று விட்டு "கேப் புக் செய்யும் போது ஒரு மொபைல் நம்பர் வேற குடுத்து இருக்கு அது கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கு யேன்னா அந்த நம்பர் கூட உங்க அப்பாவோட ஐ டி காட்ல தான் வாங்கி இருக்கு" என்றான் சுதா மீண்டும் ஒரு குண்டை தலையில் போட்டபடி
YOU ARE READING
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
General Fictionகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...