ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள் சக்தி தாய் வெளியே அமர்ந்திருப்பதை கண்டு கோவத்தில் கத்தினாள்
"கத்தாத சக்தி சும்மா நீ கத்துறதால எதுவும் சரியாகாது" என்று விட்டு தந்தை வீட்டு பத்திரத்தை வட்டிகாரனிடம் கொடுத்து பணம் வாங்கி இருக்கார்ம்மா" என்றார் தனக்குள் வந்த கோவம் அனைத்தும் கண்ணீராய் மாறிவிடுவதை உணர்ந்தவள் தன்னை கட்டு படுத்தி கொண்டு "வீட்டுக்குள்ள நம்ம திங்ஸ் இருக்குல்ல அத எடுக்க கூட விடலையா அந்த ஆளு?" என்று கேட்டவளின் கண்கள் இரத்தமென சிவந்து கிடந்தது "உங்கப்பா வீட்ட மட்டும் விடலை டி கைல ஏழூ லட்சம் பணம் வேற வாங்கி இருக்கார் போல அதான் சாமான சட்டி கூட தர மாட்டேன்னு சொல்லிட்டார் ஆல்ரெடி உங்கண்ணா அமேரிக்கா போக எட்டு லட்சம் அவர்கிட்ட வாங்கி இருக்குறதால எங்க மேல அவருக்கு நம்பிக்கையே இல்லயாம்டா" என்ற தாயின் குரலில் உயிரில்லை இருந்தாளும் அதை தாய்க்கு உணர்த்தி தாயை அழுக வைப்பது பிடிக்காது பக்கத்து வீட்டுக்கு சென்று சகிக்கூ கால் எடுத்தாள்
"சக்தி இப்போ தான் டி இன்டர்வியுக்கு போக போறேன் இரு வந்து பேசுறேன்" என்று விட்டு சகி துண்டித்து விடவும் இன்ட்ரவியூ டைம்ல அவளை டிஸ்டப் செய்ய பிடிக்காது அமைதியாக நின்றாள் இருபது நிமிடம் கழித்து சகிதாவே அழைத்து பேசியதும் விடயத்தை சொன்னாள் "சக்தி அம்மாவ பக்கத்து வீட்ல உட்கார வை டி நான் ரிஸல்ட் சொன்னதும் வர்றேன் இன்ட்ரவியூல யாரு ஸிலக்ட்ன்னு இப்பவே சொல்வாங்களாம் வைட் பன்ன சொன்னாங்க இப்போ வேலை தான் ரொம்ப முக்கியம் ஸோ கொஞ்ச நேரம் அம்மாவ பார்த்தூக்க என்ன" என்று விட்டு துண்டித்தவள் வீட்டுக்கு வந்தது வேலையோடு தான்
நாளையே ஜாயின் ஆகும் படி உத்தரவு வேறு அது சகிதாவுக்கு சந்தோசம் தான் எனவே வட்டி காரணிடம் நேராக சென்று மாசம் மாசம் வட்டி கட்றேன்னு சொல்லி வீட்டை கேட்டாள் ஆனால் அவன் தரவில்லை "அது இனி என்னோடது தான் வேண்ணா அந்த வீட்ல வாடகைக்கு இருங்கன்னு சொன்னதும் சரி என்று வாடகைக்கு நிற்க சம்மதித்து வட்டிகாரனுடனே வீ்டடுக்கு வந்தாள் வீட்டு கதவை திறந்து விட்டு சாவியை கொடுத்து விட்டு அவன் போனதுமே தாய் ஓடி வந்து சகியை கட்டி கொண்டாள்....
VOUS LISEZ
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Fiction généraleகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...