"திரு ஆங்கிள் உங்க மகன்." என்று விட்டு நிறுத்தி "ஐ மீன் சுதாகர் இப்போ என்ன பன்றான்?" என்று கேட்டான் தொலைபேசியினூடாக "என்னத்த தம்பி சொல்றது பிஸினஸ் படிக்க சொல்லி கெஞ்சினோம் கூத்தாடினோம் ஆனால் அவன் யார் பேச்சும் கேட்க்காம அவன் இஷ்டத்துக்கு போலீஸ் தான் தம்பி ஆகினான் நல்லா படிக்கிற பையன் உனக்கே தெரியும்ல" என்றார் பதிலையும் அவர் மன கவலையையும் சேர்த்து
சுதாகர் போலீஸ் ஆகினான் என்பது தனக்கு தெரியாமல் இல்லை ஆனாலும் அவன் தொலைபேசி இலக்கம் இல்லை என்பதால் தான் இந்த விசாரிப்பே
சுதாகர் மதுரையில் ஏதோ ஒரு ஊரில் தான் டி எஸ் பி யாக இருக்கின்றான் என்று தெரிந்தும் அங்கு சென்று பார்ப்பது கால தாமதம் என்பதால் திருவின் மூலம் தொலைபேசி இலக்கத்தை பெற்று கொண்டு சுதாகருக்கு அழைத்தான்.
"சுதா நான் சிவப்ரசாத் பேசுறேன்" என்றது தான் தாமதம் "அண்ணா உங்க குரல் எனக்கு தெரியாதா அதோட என்ன மன்னிச்சிறுங்க அண்ணா அன்னியோட கடைஷி கிரிகைக்கு வரவும் கிடைக்கல அதோட அங்கிளோட கடைஷி நேரத்துக்கும் வரலை எனக்கு கொஞ்சம் ஓவர் பிஸி அண்ணா அதான்" என்று மன்னிப்பு கேட்க்கும் விதமாக பேசியவனை தடுத்து "இட்ஸ் ஒகே சுதா ஆமா சென்னைல வர்க் பன்னாம எதற்கு அங்க போயிட்டு இரு்கக?" என்று கேட்டதும் "அதுவா அங்க இருந்தப்ப ஒரு பெரிய போதை பொருள் கும்பல் சம்மந்தமான கேஸ் இன்வெஸ்டிகேட் பன்னேன் அத முழுசா கண்டுபிடிக்கிறதுக்குள்ள அவங்களே அவங்க செல்வாக்க வெச்சி என்ன ட்ரான்ஸ்ஸர் பன்னிட்டாங்க அப்பாவுக்கு என் மேல ஆல்ரெடி கோவம் அவங்க ட்ரான்ஸ்ஸர் பன்னதும் நான் உங்கள மீட் பன்னி இங்கயே இருக்கற மாதிரி பன்னிக்கலாம்ன்னு சொன்னேன் அப்பா விடவே இல்லை என்ன இனியும் இதுல தலை போடதன்னு அனுப்பியே வெச்சிட்டார்"
"ஒகே ஒகே சரி சுதா நான் வைக்கட்டுமா?" என்று கேட்டு விட்டு மொபைலை துண்டித்தவன் நேராக காவல்துறை அமைச்சரை மடக்கி "என்னோட கெஸ்ட்ஹவுஸ் வரை வந்துட்டு போக முடியூமா சார்?" என்று கேட்டான் அடக்கமாக உடனே "இதோ நான் உங்க கெஸ்ட் ஹவுஸ் பக்கத்துல தான் இருக்கேன் சார் வர்றேன்" என்றவர் வந்து சேர்ந்தார்
ESTÁS LEYENDO
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Ficción Generalகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
