காலை விடிந்தும் அறையை விட்டு வெளி வராது சோகமாக அமர்ந்து இருந்தாள் சக்தி... திடீர் என்று தன் உடைகளை எடுத்து வைக்க துவங்கியவள் அறையை விட்டு வெளியே செல்லவோ காலை உணவை சாப்பிடவோ மறந்தே போனாள்.
தங்கையின் காதல் விவகாரத்தில் எந்த மனதிருப்தியும் இன்றி தனக்குள் இருக்கும் கோவத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல் வாசலில் அமர்ந்து தன் உடைகளை தைய்த்து கொண்டு இருந்தாள் சகி
"உள்ள வரலாமா?" என்ற குரலில் திடுக்கிட்டு தலையை நிமிர்த்தியவள் ஜயா டீச்சரை கண்டதும் வேக வேகமாக எழுந்து மறியாதையோடு "வாங்க மிஸ் வாங்க" என்று அழைத்து அமரவும் வைத்தாள். ஜயா டீச்சர் கையில் பெரிய பார்ஸல் ஒன்று இருப்பதை கண்டு 'எங்காச்சும் போயிட்டு வர்ற வழி போல' என நினைத்து கொண்டாள்.
"எப்டி இருக்க சகிதா...?" என்று டீச்சர் கேட்டதுமே தன்னை ஒரு நிலை படுத்தி கொண்டு "ஹா நல்லா இருக்கேன் மிஸ் நீங்க எப்டி இரூக்கீங்க?" என்று கேட்டு டீச்சரை அவதானமாக பார்த்தாள். சிரித்த முகமாக "நான் நல்லா தான்மா இருக்கேன். ஆமா சக்தி எங்க?"
டீச்சர் சக்தியை பற்றி கேட்டதுமே ஒரு நொடி தயக்கமும் தலை குனிவுமாக நின்றவள் "அவ ரூம்ல டீச்சர் இருங்க கூப்டுறேன்" என்று நகர போனவளை தடுத்து "அதுலாம் வேண்டாம் சகிதா" என்று விட்டு கையிலிருந்த பார்ஸலை கொடுத்து "இத நான் கொடுத்தேன்னு சக்திக்கு கொடுத்துறு" சகிதா பேகை யோசனையோடு பார்ப்பதை கண்டு "சித்து பையனுக்கு கொடுக்க கொஞ்சம் சிப்ஸ் என்ட் ட்ரஸஸ் டா" என்று கூறவும் தான் சகிதா இன்னும் யோசிக்க ஆரம்பித்தாள்.
அதை புரிந்து கொள்ளாத ஜயா டீச்சர் "அப்பறம் கல்யாண வேலை எல்லாம் எப்படி மா போகுது?" என்று கேட்ட டீச்சரிடம் எதையும் காட்டி கொள்ளாது "ஹா அதுலாம் நல்லா தான் போகுது... டீச்சர் இன்வைட் பன்றேன் கண்டிப்பா வாங்க" என்றதும் கதிரையை விட்டு எழுந்த ஜயா டிச்சர் சகியின் தலை கோதி "கண்டிப்பா மா" என்று விட்டு அவர்களே "நீ பன்னின தியாகங்களுக்கு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை காத்திட்டு இருக்குமா.. நீ நல்லா இருப்ப" என்று கூறி சென்றார். அவர்களின் வார்த்தையில் உச்சி குளிர்ந்தாளும் அந்த பேகை பற்றிய சிந்தனையில் நேராக சென்று சக்தியின் அறை கதவை தட்டினாள்.
YOU ARE READING
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
General Fictionகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...