இரவு உறங்கும் நேரமாக சிவாவிற்கு அழைத்தாள் சக்தி "சார் கால் பன்னி இருந்தீங்கலாமே தாரா சொல்லிச்சி"
"ஓஹ் அதுவா ஆமா சக்தி சும்மா தான் எல்லாம் ஒகேவான்னு கேட்க்கலாம்ன்னு தான் கூப்டேன்"
"ஆமா சார் இங்க எதுவுமே ப்ராப்ளமில்ல" என்றாள் திருப்தியாக இதுவரை சிவாவை சார் என்று விருப்பத்தோடு தான் அழைத்தாள் ஆனால் இன்று சார் என்று அழைத்தது கடமைக்கா மட்டுமே ஏனோ சார் என்றால் அதிக இடைவேளி இருப்பதாக உணர்ந்தாள். சக்தி
"தாரா எங்க?"
"அவ கேம் விளையாடிட்டு இருக்கா சார் நீங்க சாப்டீங்களா அம்மா அக்கா மாமா எல்லாம் கேட்டதாக சொல்லூங்க"
"நான் சாப்டேன் பட் சொல்ல மறந்துட்டேன் சக்தி எக்சுவலி ஒரு சின்ன கேஸ் விஷயமா யூ எஸ்ல இருக்கேன்"
"ஓஹ் சரி சார்" என்று விட்டு அவனை பேச்சுக்கு இழுக்கும் நோக்கில் "உங்க சிஸ்டர் வந்தாங்களா சார்?"
என்று கேட்டதும் "அப்கோஸ் குட் நைட்" என்று இரண்டையும் ஒன்றுக்கே சொல்லி விட்டு மொபைலை வைத்து விட்டான். 'சரியான காரியவாதி' என்று புலம்பிக்கொண்டே அவளும் கேம் விளையாடானாள்..விடிந்ததும் தாராவை கூட்டி சென்றாள் தாத்தாவை காட்டுவோம் என்று வீட்டுக்குள் அழைத்தவர் தாராவை தூக்கி மார்போடு அணைத்து கொண்டார் "நான் யார்ன்னு தெரியுமா தாரா?" என்று பேராசையோடும் கவலையோடும் கேட்டார்.
பேத்திக்கு தன்னை தெரிந்து இருக்க வேண்டும் என்பதூ தான் அவருடைய அப்போதைய பேராசையாக இருந்தது தாரா தெளிவாக புன்னகைப்போடு "தாத்தா..." என்றாள்
உடனெ சந்தோசமாக புன்னகைத்து விட்டு "உங்கப்பா சொல்லி குடுத்தாரா டா கண்ணா?"
"ஆமா போட்டோ காமிச்சார்"
"அட அதானே பார்த்தேன் சரி தாத்தா கிட்ட இருந்து பாப்பாக்கு என்ன வேணும்" என்று கேட்டவரை பார்த்து "எங்க கூட சென்னை வாங்களேன் தாத்தா" என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு.
YOU ARE READING
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
General Fictionகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...