25-காதலே

1.6K 39 0
                                        

ச்ருதி வரும் நேரம்  பார்த்து காலையில் வீட்டில் நிற்காது வெளியே கேட்டுக்கு அருகில் சென்று நின்றான் சிவா பக்கத்து வீட்டு கேட் திறக்கும் சத்தம் கேட்டதுமே தன்னை  ஒரு முறை சரி படுத்தி கொண்டு ஆனால் வேறு ஒரு விடயத்திற்காக காத்திருப்பது போன்று யோசனை பன்னும் விதம் முகத்தை வைத்து கொண்டு இருந்தான்.

"எக்ஸ்யூஸ் மீ நீங்க நகர்ந்து கிட்டா நாங்க உள்ளே போகலாம்" என்றாள் ஷ்ரூதி  உடனே வாயை குவித்து "ஓஹ் சாரி" என்று விட்டு அதே போல் யோசனையோடு நின்றான்.

உ்ளளே சென்று ஸ்வீட் கொடுத்து விட்டு வந்தவள் "காலேஜ் போகலையா சிவா?"

திரும்பவும் பெரிய இவனாட்டம் "என்ன கேட்டீங்க?" என்று கேட்டு வைக்கவும் "காலேஜ் போலயா?"
என்று கேட்டாள்

"காலேஜா இனி தான் ப்பா... எவனாச்சும் ஏழு மணிக்கே போவானா..?"

"சரி அப்போ நான் போகட்டுமா?"

"போக கூடாதுன்னா இங்கவே இருக்கவா போறீங்க போங்க" என்றான் நக்கலாக

"சரி என் பெயர கண்டு பிடிச்சாச்சா?"

"பெரிய பெயர் அத அப்பவே கண்டு பிடிச்சிட்டேன்" என்றதும் "ஓஹ் அப்படியா சரி சொல்லுங்க பார்ப்போம்"

"ஷ்ரூதி தானே உன் பெயர்"

"ஷ்ருதி காலிங் நேம்"

"ஷ்ருதிகா தானே பெரிய வித்தியாசம்" என்று நக்கலாக சொன்னதும் "ச்சீ போ" என்று விட்டு சென்று விட்டாள்.

அடுத்த நாள் ஸ்வீட்டும் இல்லை ஷ்ருதியும் இல்லை என்று ஆகி போகவும் அன்றே காலேஜ் போக கூட அவன் மனம் இடம் கொடுக்கவில்லை "எங்க போயிறுப்பா? ஏன் வரலை? " என்றெல்லாம் யோசித்து   யோசித்தே அமர்ந்திருக்கவும் திருவின் மனைவி வந்து "என்ன சிவா காலேஜ்லாம் கட்டடிக்க ஆரம்பிச்சிட்ட காலேஜ் போப்பா" என்று கூறி வி்ட்டு சென்றாள்.

எதுவும் காதில் விழாது சிலையாக நின்றவன் காலேஜ் செல்லும் விதமாக நீட்டாக உடுத்தி கொண்டு ஷ்ருதியை தேடி அவளது வீட்டுக்கே சென்றான். வாசலில் இரண்டு காவல்காரன் தோட்டத்தில் ஒருவன் என்று கொஞ்சம்  பயமாக இருந்தாளும் வீட்டுக்குள் சென்றான்
ஷ்ருதி தான் இவன் அழைப்பில்  வந்தாள்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя