டாக்டர் தாரிணிக்கு எப்டி டாக்டர்? எல்லாமே ஆல்ரைட் தானே நெக்ஸ்ட் மன்த் டெலிவரி டேட்லாம் கன்போம் தானே" என்று ஆசையோடு வினவ எதுவுமே பேசாது தன் அறைக்குள் சென்று அமர்ந்தார் டாக்டர்.சிவாவும் எந்த சங்கடமும் இன்றி டாக்டர் ரூமிற்குள் சென்று டாக்டரை பதற்றமாக பார்த்தான் .
"உட்காருங்க சிவா சார்" என்று மழை ஓய்ந்த பின் வரும் நிஷப்தம் போன்ற ஒரு அமைதியோடு சொன்னார்
சட்டென்று உட்காரந்தவன் கேள்வியாக நோக்கினான்
"சிவா சார் உங்க மனைவி தாரிணி ஒரு ட்ரங் எடிக்ட் இது உங்களுக்கு தெரியுமா" என்று சட்டென்று கேட்டதும் புருவங்களை சுருக்கி கேள்வியோடு நோக்கிய படியே "இல்லவே இல்லை" என்று தலையாட்டினான்.
"நீங்க இல்லை என்று சொன்னாளும் உங்க மனைவியோட ஹெல்த் கன்டிஷன் அவங்க ஒரு ட்ரங் எடிக்ட்ன்னு தெளிவாக சொல்லுது... அதோட இந்த குழந்தை இதற்கு மேல்ல உங்க மனைவி வயிற்றுல இருக்கவே கூடாது.... இவங்களோட இந்த பழக்கத்தால குழந்தை இறந்து போக வாய்ப்பு இருக்கு அதுவும் இனி நீங்க உங்க மனைவிய பத்தராமகவே பார்த்துகிட்டாளும் ஐ மீன் போதை பொருட்கள் நெருங்க விடாம பார்த்துகிட்டாளும் அவங்க கண்டிப்பா ஸூஸைட் ட்ரை பன்ன வாய்ப்பு இருக்கு அதுவும் குழந்தைக்கு சரியில்ல இப்போ நாங்க என்ன பன்னனும்" என்று கோவமாக கேட்டார் டாக்டர்.
அந்த டாக்டர் பேசியது காதில் விழூந்தும் மூளையும் மனமும் ஏற்க மறுத்தது ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாது "டாக்டர் என் தாரிணி அப்டி இல்ல டாக்டர்" என்று விட்டு தலையை இரு கைகளுக்குள்ளும் ஏந்தி கொண்டான்
"சார் உங்க மனைவி எப்டியோ போதைக்கு அடிமையாகிட்டாங்க அது முடிஞ்ச கதை பட் குழந்தையும் அந்த போதையில தான் இருக்கு ஸோ நாங்க இப்போ என்ன பன்னட்டும்" என்று கேட்டார்
"உங்க படிப்புக்கும் அனுபவத்துக்கும் எது பன்னா சரின்னு படுதோ அத பன்னுங்க" என்று விட்டு எழுந்து வீட்டுக்கு சென்று விடடான்....தாரிணியை கூட பார்க்காது நேராக வீட்டுக்கு சென்றான்

VOUS LISEZ
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Fiction généraleகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...