சரத் சிந்துவின் மீது பைத்தியமாக மாறி இருந்தது மூவருக்கும் நன்றாகவே புரிந்தது... "சரி விடுங்க" என்று விட்டு சிவாவை நோக்கி "எனக்காக அவர மன்னிச்சிறு அண்ணா.... அன்னைக்கு அன்னி அப்படி ஆகலைன்னா கண்டிப்பா அந்த ஷ்ரூதி என்ன துன்புறுத்தி இருப்பால்ல.... இதுலாம் பார்க்கும் போது தப்பு பன்னது இவன் இல்லயே அண்ணா" என்றாள் கணவனுக்காக கெஞ்சியபடி
சிவா மௌனமாகவே நிற்கவும் "ஷ்ருதி தப்பு பன்ன இவர யூஸ் பன்னிக்கிட்டார் இவரும் சுயநலமா யோசிச்சு இருக்கார் தான். நான் இவர தப்பே பன்னலைன்னு சொல்லல பட் இவர் ஒன்னும் ரொம்ப கெட்டவனில்ல" என்றாள் அதுவும் சிவா எதுவும் பேசாது போகவும் சக்தி தான் "சாரி டூ சே... சிவா" என்று விட்டு "சிந்து இஸ் கரெக்ட்...யேன்னா சரத் மேல எவ்ளோ தவறு இருக்கோ அதே அளவு தவறு தாரணி மேலயும் இருக்கு" எனற்தும் கோவமாக அவளை திரும்பி பார்த்தான் சிவா...
சரத் சிந்து இருவருக்கும் பயமும் அதிர்ச்சியும் தான்.
அன்னியை பற்றி தப்பா பேசினா அண்ணா எப்படி எடுத்துக்கொள்வார் என்றே தெரியாது. ஆனால் சக்தி கொஞ்சமும் பயப்புடாது "எதுக்கு என்னை முறைக்கிறீங்க.... சிவா நான் தப்பாக ஒன்னும் சொல்லவே இல்ல கணவன ஏமாற்றினவ ஷ்ருதி, கணவன் பழக வேண்டாம்ன்னு சொல்லியும் வான்டட்டா பழகினதால தான் நிறைய தவறுகள் நடந்தது." என்று கூறியதும் சிவா அமைதியாக "யு ஆர் கரெக்ட் பட் திஸ் இஸ் லாஸ்ட் வார்னிங் என் மனைவி பற்றி இனி பேச வேண்டாம் அதற்கான உரிமைய நான் யாருக்கும் கொடுக்கவே இல்ல" என்று விட்டு எழுந்து கொண்டான். உடனே ஓடி வந்த சரத் "சார் என்ன மன்னிச்சி" என்று பேசும் போதே "லீவ் இட்" என்று விட்டான் உடனே "ஆமா என்ன சாப்ட்றீங்க சார்? உட்காருங்க ப்ளீஸ்" என்று கூறி உட்கார வைத்தான். சரத் சந்தோச பரபரப்போடு தான் பேசினான். உடனே சிவா "உங்க கிட்ட இருக்குறத குடுங்க" என்று விட்டு தான் உட்கார்ந்தான்.மாலை நேரம் என்பதால் பரபரப்பாக சில ஸ்னேக்ஸ் மற்றும் ட்ரிங்ஸ் தயார் செய்தான் சரத் அவைகளை சிவாவுக்கு வைத்து சாப்பிட கொடுத்த சிந்து "அண்ணா நீங்க நம்ம வீட்லயா இருக்கீங்க?" என்று கேட்ட தங்கையிடம் "இல்ல இவளோட வீட்டுல" என்றான்
YOU ARE READING
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
General Fictionகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...