02-ஹீரோ ஹீரோயின் சந்திப்பு

3.6K 77 1
                                        


சகிதா சோகமாக வீட்டுக்கு சென்று யாரிடமும் எதுவும் சொல்லாது அந்த மெமரிகாடை மொபைலில் கனெக்ட் செய்தாள். அதில் பல நாட்களாக அவள் யாரிடமாவது ஊர்கதை கதைப்பது எல்லாம் ரெகோட் செய்யபட்டு இருந்தது  அதாவது பேசுவது என்னவென்று புரியவில்லை தான் ஆனால் மணிக்கணக்கில் பேசி இருப்பது பார்வைக்கே தெரிந்தது..... சிசிடிவி புட்டேஜை மெமரியில் அப்லோட் செய்து கையில் கொடுத்ததை நினைத்து வெட்கப்பட்டாள்.

உடனே அதை மறைத்து வைத்து விட்டு  அம்மாவிடமும் தங்கையிடமும் தன்னை வேலையை விட்டு நிறுத்தி விட்டதை சொல்லாது  "ம்மா நான் இனி அந்த அச்சமில்லை பத்திரிகை ஆபிஸ்க்கு  வேலைக்கு போகலைமா" என்றாள் தயக்கத்தோடு

சோகமாகவும் கோவமாகவும் திரும்பிய தாய் "அப்போ நாளைல இருந்து வெசத்தயா குடிக்க போறோம்"  என்று கேட்டு விட்டு இளையவளை பார்த்தாள் தாய், உடனே சங்கடமும் தலைகுனிவுமாக

"ம்மா இல்லம்மா அந்த எம் டி சரியானா சிடுமூஞ்சம்மா?" என்று கவலையோடு பதில் சொன்னாள் சகிதா

"நீ ஏன்க்கா அவர் முகத்த பார்க்குற நீ உன் வேலைய பார்க்குறதுக்கு என்ன?"  என்று தங்கையும் கேள்வி கேட்டாள். உடனே டிஸ்மிஸ் செய்யப்பட்ட காரணத்தை நினைத்து வெட்கினாள். தங்கை சொல்வதூ நிஜமே  வேலையை பார்த்து இருந்தால் எல்லாம் சரியே

"நான் என் வேலைய தானே பார்த்தேன் அதுல ஒரு சின்ன மிஸ்டேக் உடனே கத்தி இம்சை பன்டார் அசிங்கமாகிறுச்சி மா" 

"நானும் அந்த ஆபிஸ்க்கு தான் நாளைக்கு இன்ட்ரவியு போறேன் பார்ப்போம் அந்த சிடுமூஞ்ச" என்ற தங்கையிடம் " ஹும்.... இன்ட்ரவியூ எடுக்குறதுக்குலாம் எங்க எம் டீ வர மாட்டார் அவர் அவரோட ரூம விட்டு வர்றதே இல்ல.. அவரா எங்கள கூப்டா தான் போனும்.. நானே போயி  ஆறு மாசத்துக்கு அப்பறம் தான் மூஞ்ச முதல் தடவை நேர்ல பார்த்தேன்..  இரண்டாம் தடவை இன்னைக்கு பார்த்தேன். இது நாள் வரைக்கும் நான் இரண்டு வருஷம்  அங்க தான் வேலை பார்த்தேன்னா கேட்டுக்கோ"

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя