46- சரத்

1.5K 47 12
                                        

"டேமிட்" என்று கூறி மேசையில் கையை அடித்து கொள்ளவும் "அய்யோ என்னங்க இது கைய அடிச்சிக்கிறீங்க" என்று பதறலோடு அவன் கையை தொட்டாள்.

அவளை முறைத்த பார்வையோட கையை விலக்கி கொண்டு "ப்லடி டோன்ட் டச் மை ஹேன்ட்...." என்றான் கோவமாக கத்தி

எதுவும் புரியாத சக்தி "என்னாச்சி ஏன் இவ்ளோ கோவம்" என்று கேட்டு விட்டு அவனை கூர்ந்து நோக்கினாள். ஆனால் புரியவில்லையே என்ற ஒரு பார்வை அவளிடம்

"ஹேய் ஹேய் நடிக்காத டி" என்று கத்தி விட்டு கோவமாக நோக்கி "டெல் வட்ஸ் யு ஆர் ப்ளேன்" என்று கேட்க்கவும் அதே புரியாத பார்வையோடு "ப்ளேன்லாம் எதுவுமே இல்ல சார் கை வலிக்குமேன்னு தான் தொட்டேன்" என்றாள்.

உடனே அவள் முடியை கொத்தாக பிடித்து பற்களை நரநரவென்று கடித்த படி அவளுக்கு மட்டும் கேட்க்கும் விதம் அவள் காதருகே குனிந்து "சக்தி ப்ளீஸ்... ஏமாற்ற நினைக்க நான் ஒன்னும் இருவது வயசு சிவா கிடையாது....டெல் நீ எதற்காக வந்த...? என் வாழ்க்கைல எதற்காக வந்த?"

அவன் முடியை இழுத்து பிடித்திருந்த வலியில் முனங்கிய படியே "சார் ப்ளீஸ் விடுங்க" அவள் கண்கள் வலியில் குளமாகி இருப்பதை கண்டதும் சட்டென்று விட்டவன் "சாரி என்ன மிருகமாக்காம சொல்லிரு மன்னிச்சி விட்டுற்ரேன்" என்றான் நிதானமாக பின்பு இரண்டடி நடந்து விட்டு ஒரு செயாரில் அமர்ந்து கண்களை மூடி கொண்டான்.

சக்தி அவனருகே சென்று பக்கத்தில் அமர்ந்து "சார் நான் உங்கள லவ் பன்றத தவிர இப்போ என் மனசுல வேற எந்த எண்ணமும் கிடையாது சார்... ப்ளீஸ் எனக்கு எதுவுமே புரியலை கொஞ்சம் தெளிவாக கேளுங்க நான் உங்களுக்காக என் உசுரயே தருவேன் அத விட்டு நான் ஏன் உங்கள ப்லேன் பன்னி ஏமாற்றனும்" என்றாள் அழுதபடியே.... உடனே இன்னும் தன்னை நிதானபடுத்தி கொண்டு

"சக்தி ப்ளீஸ் லவ் கிவ்வுன்னு என்ன முட்டிளாக்காத நீ எதற்காக என் வாழ்க்கைல மனைவியாக வரனும்ன்னு ப்லேன் பன்னின... அத சொல்லு நிஜமாகவே நான் உன்ன விட்டுட்றேன்" என்றதுமே கண்ணீரை துடைத்த படி "நான் எங்க சார் உங்க வாழ்க்கைல வந்தேன் நீங்க தான் என் வாழ்க்கைல வந்தீங்க.... அன்னைக்கு ஒரு நாள் காலைல ஜாகிங் போறப்ப நான் வந்து தாரா வரலையான்னு கேட்டேன் நீங்களும் ஏதாச்சும் சொல்லி அனுப்பி இருந்து இருக்கலாம் பட் நீங்க தானே சார் என்ன கூட்டி போயி தாராவுக்கு துணையாக வைத்து சம்பளத்துக்கு மேல பணம் கொடுத்து ஆரம்பிச்சீங்க... நீங்க தானே கடத்திட்டு போனீங்க நீங்க தானே அவங்க கிட்ட இருந்து காப்பாற்றினீங்க  அப்பறமா கூட நீங்க தானே காதல் இருக்குன்னு பொய் சொல்லி கல்யாணம் பன்னிக்கிட்டீங்க... என் வாழ்க்கைல நீங்க வந்தீங்க சார் உங்க வாழ்க்கைல நான் வரலை...." என்றதும்

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now