45-மாற்றம் ஒன்றே மாறாதது

1.1K 46 7
                                    

அடுத்த நாள் காலையுடனே அவளை வீட்டில் விட்டு விட்டு  தாராவை பாடசாலையில் விட்டு விட்டு தானும் ஆபீஸ் சென்றான்.

சிவா நிஜமாகவே ஜடம் போன்று தான் ஆகி இருந்தான் "என்ன இவள் என்னை இப்படி நிர்பந்த படுத்தி விட்டாள்"

ஆபீஸிலும் எந்த வேலையும் பெரிதாக இல்லாது போகவும் நேராக வீட்டுக்கு சென்றான்... அவனது வீட்டுக்கு தான்.... பகலுணவை ஆடர் செய்து தான் சாப்பிட்டான் பின்பு குட்டி தூக்கம் ஒன்றையும் போட்டவன் இரவு பத்து மணியானதும் சக்தியின் வீட்டுக்கு சென்றான்.

தாரா சக்தியின் நெஞ்சில் தலை சாய்த்து உறங்கியிருந்தாள்.  தாராவின் முடியை கோதி கோதி ஏதோ சிந்தனையில் இருந்தாள் சக்தி

அறைக்கு சென்றவன் எதுவும் பேசாது சென்று தன் லேப்டப்பை வைத்து விட்டு பாத்ரூம் சென்றான்... சக்தி தாராவை கட்டிலில் கிடத்தி விட்டு எழுந்து  சென்று டைனிங் டேபிலில் உணவை வைத்தாள்...

சிவாவும் நைட் ட்ரஸ்ஸில் சாப்பாட்டு அறைக்கு வந்து சாப்பிட்டான் எதுவும் சக்தி கேடக்கவே இல்லை....சிவா இரண்டு வாய் போட்டவன் சக்தியை பார்த்து "அம்மா அக்கா அஷ்வின் எல்லாம் எங்க?"

"மும்பைல மாமாவோட ஒன்றுவிட்ட அக்கா மகளுக்கு கல்யாணம் ஆம் அதான் போயிட்டாங்க..."

"எப்போ வருவாங்க?"

"ஒரு வீக் ஆகும்"

"சரி நீ சாப்டியா?" இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள்  உட்கார் என்று அவனும் கண் அசைவுகளின் மூலம் தான் காட்டினான்.

சக்தி அமர்ந்து கொண்டாள் "நீ ஏன் போகலை?" "தாராவுக்கு ஸ்கூல் இருக்கும் போது  நான் எப்டி போவானேன்" என்று கேட்டதூம் ஒரு நொடி சிவாவுக்கே சக்தியை பார்க்க பாவமாக தான் இருந்தது...

'தன்னால் அவள் அவளது சுதந்திரத்தை இழந்து கொண்டு தான் இருக்கின்றாள்'  என்பதே இன்று தான் சிவாவுக்கு புரிந்தது

"சரி சாப்டு" என்றான் அன்போடு தான் "இல்ல வேண்டாம்" என்றாள் முடிவாகவே  "உன்கிட்ட பேசலாமா?" என்று கேட்க்கவும் அவளும் அனுமதி கொடுத்தாள்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن