தாயின் குரல் கேற்கும் வரை நிம்மதியற்று தவித்தாள் சக்தி.... 'அம்மாவுக்கு உடம்பு ஏதும் சரியில்லயா...?' என்று யோசித்தவள் 'அப்டி எதாவதுன்னா அம்மாவுக்கு என்கிட்ட சொல்றதுக்கு என்ன...?'.அக்கா வந்துருப்பாங்களோ என்று சகிதாவின் நினைவு வர அவளுக்கு அழைத்தாள் "ஹா சொல்லு சக்தி?" என்று பேசிய அந்த குரல் என்றுமில்லாதது போன்ற ஒரு குதூகலத்தோடு தெரிந்தது "ரொம்ப சந்தோசமாக பேசுற... என்ன விஷயம்க்கா?" என்று கேட்டதும் "அது வந்து எனக்கு சென்னைல டுடேய் பத்திரிகை ஆபீஸ்ல வேலை கிடைச்சிருக்கு சக்தி.. அதுவும் நம்ம பக்கத்து ஏரியாவுல உள்ள ப்ரான்ச்லயே ஜாயின் பன்னிக்க சொன்னாங்க அதான் சந்தோசமாக இருக்கேன்"
"வாவ் கன்ங்ராட்ஸ்க்கா... ஆமா சம்பளம் எப்டிக்கா?"
"சம்பளம் அச்சமில்லை பத்திரிகை ஆபீஸ்ல கொடுத்தத விட கம்மி தான் பட் இப்போதைக்கு இரண்டு நாள்ல வேலை கிடச்சதே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு.... ஆமா அம்மா எங்க? அவங்க கிட்ட கொடு நானே அவங்க கிட்ட சொல்றேன்" என்று கேட்டவளிடம் தயக்கத்தோடு
"அய்யோ அக்கா நான் குன்னூர்ல இருக்கேன் அம்மா வீட்ல தான்" என்று விட்டு அக்காவின் பதிலுக்கு காத்திருந்தாள்
"என்னடி சொல்ற இப்போ இருக்குற பண பிரச்சிணைல குன்னூர்லாம் சுற்றி பார்க்குறது அவசியமா.....?"
சகியின் குரலில் எரிச்சல் நன்றாகவே தெரிந்தது உடனே "அய்யோ அக்கா ஊருலாம் சுற்றி பார்க்க வரலை நான் சொல்வேன்ல தாரான்னு ஒரு பொண்ணு.."என்று கேட்டதும் கொஞ்சம் யோசித்து விட்டு "ஏதோ காலைல ஜாகிங் பன்ன போறப்போ பேசுவியே அந்த பிள்ளையவா சொல்ற?""அதே அதே அவ நேற்று வரலைன்னு அவங்க அப்பா கிட்ட விசாரிச்சேன் அப்போ தான் சொன்னாங்க... தாராவுக்கு உடம்பு சரியில்லேன்னு.... அவள பார்த்துக்க ஆயிரம் வேலைக்காரங்க இருந்தா கூட அன்பு காட்ட யாருமில்லன்னு என்ன அவங்க தாராவ பார்த்துக்க முடியுமான்னு கேட்டார்" என்று முழுதும் சொல்லி முடிப்பதற்குள் "என்னடி முகத்துல எறிந்தாப்புல முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே நீ கஷ்டப்பட்டு படிச்சது ஊர் வீட்டு புள்ளைங்கள மேய்க்கவா.... இல்லேல்ல.... நானும் அம்மாவும் எவ்ளோ வயித்த கட்டி உன்ன படிக்க வெச்சி இருக்கோம் நீ என்னடான்னா வீட்டு வேலைக்கு போயிட்ட.... இத பார் சக்தி இப்பவே வீட்டுக்கு வா நீ யாருக்கும் வேலைக்காரிய இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்..." என்று கத்த தொடங்கி விடவும் "அய்யோ அக்கா கொஞ்சம் பொறு..." என்று விட்டு "அக்கா புரிஞ்சிக்கோ க்கா தாரா குழந்தை அவளுக்கு இப்போ கேன்ஸர் வேற.... நம்ம பிள்ளைக்கு இப்டின்னா எப்டி இருக்கும் அது போல தான் தாராவும் அதோட தாரா ஒரு அம்மா இல்லாத குழந்தை வேறு.... அவங்க அப்பாவால தாய வாங்க முடியலை பட் பாசத்த ரொம்ப பணம் கொடுத்து வாங்கி அவங்க பொண்ணுக்கு கொடுத்து இருக்கார் அதோட நானே இங்க ராணியாட்டம் தான் இருக்கேன் பட்டன ப்ரெஸ் பன்னா சாப்பாடு வரும்ன்னா பாறேன்"
YOU ARE READING
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
General Fictionகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...