சக்தி சென்றதும் மீண்டும் தமிழை அழைக்க மாடிக்கு சென்றாள் ஹாரிகா "தமிழ் கொஞ்சம் வர்றீங்க பேசலாம்" என்றதும் சோர்வாக அமர்ந்திருந்த தங்கை ஹன்ஷிதா "என்னக்கா இது அடிக்கடி வந்து அவர கூப்புட்ற என்னாச்சி எனதிங் ஸீரியஸ்?" என்று கேட்டு கொண்டே எழுந்து நின்றாள். வேகமாக உள்ளே சென்ற ஹாரிகா அவளை அமர வைத்து விட்டு "நீ முதல்ல அமைதியா இரு ஹன்ஷ் ப்ராப்ளம்லாம் எதுமில்ல என் வர்க் விஷயமாக தமிழ்கிட்ட கொஞ்சம் பேசனும் அவ்ளோ தான்" என்றாள் சிரித்த முகமாக "ஒகெ ஒகே " என்று விட்டு அமர்ந்து கொண்டவள் "தமிழ் ப்ளீஸ் அக்காக்கு உதவி பன்னுங்க" என்று கூறி அனுப்பி வைத்ததும் தமிழ் அறையை விட்டு வெளியாகினான். ஹாரிகாவும் தங்கையை நெற்றியில் முத்தமிட்டு விட்டு "டேக் கெயார் பேபி" என்று விட்டு வெளி வந்து அறை கதவை மூடினாள்
தமிழின் பின்னாடி சென்ற ஹாரிகா அவன் நேராக சென்று சோபாவில் அமர்ந்ததும் கொஞ்சம் தூரம் தள்ளி அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள் "காதலிச்சி பிரிஞ்சதற்கு அப்பறமா வேறு ஒருத்தர கல்யாணம் பன்னிக்கிறது பெரிய குற்றம் கிடையாது னு எனக்கு தெரியும் பட் காதலிச்ச பொண்ணு அங்க உங்களுக்காக காத்துட்டு இருக்கான்னும் போது இங்க இப்டி ஒரு பொண்ணோட குடும்பம் நடத்துறது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா தமிழ்?" என்று அவனை வெட்கி தலை குனியும் விதம் கேள்வி கேட்டாள் உடனே எதுவும் பேசாது யோசனையோடு அமர்ந்திருந்தவனை மீண்டும் குற்றம்சாடும் விதம் "அந்த சக்தி என்ற பொண்ணு உங்கள நம்பிக்கிட்டு இருந்தா அவ வாழ்க்கைக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க?" உடனே பதற்றமாக "அவளோட ப்ரென்ட்க்கு அம்மாவுக்கு எல்லாம் நான் கல்யாணம் பன்னிக்கிட்ட விஷயம் தெரியும்" என்றான். தன்னை இதன் மூலம் நியாயப்படுத்த முடியும் என்று நினைத்து "நான் அவங்க அம்மாவ நண்பிய பற்றி கேட்கலை எனக்கு அந்த பொண்ணுக்கான பதில சொல்லுங்க" என்று கேட்டும் எந்த பதிலும் இல்லாது போகவும் கடுப்படைந்தவள் "அவளுக்கு கால் பன்னி ப்ரேகப் பன்னிக்கலாம்ன்னு ஒரு பொய்யாவது சொன்னீங்களா? இல்ல கல்யாணம் ஆயிறுச்சின்னு உண்மைய மெஸேஜ் மூலமாகவாச்சும் சொன்னீங்களா?"
ESTÁS LEYENDO
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Ficción Generalகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
